மீண்டும் கமலுடன் இணையும் மாதவன்

நள தமயந்தி கமல்ஹாசன் தயாரித்த படம். அதில் நாயகனாக நடித்தார் மாதவன். கடைசி காட்சியில் கமலும் இப்படத்தில் தோன்றுவார்.
அடுத்து அன்பே சிவம் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் கமல்ஹாசனும், மாதவனும் கை கோர்க்கவுள்ளனர்.
யாவரும் கேளிர் படத்தில்தான் இந்த இணைப்பு நடக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இப்படத்தில் மாதவனுக்கு முக்கிய கேரக்டராம். படம் முழுக்க முழுக்க காமடியை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.
கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, ஆர்வமாக ஷூட்டிங் கிளம்பத் தயாராகி விட்டேன் என்று கூறியுள்ளார் மாதவன்.
படத்தின் நாயகி திரிஷா என்பது தெரிந்த விஷயம். இந்தப் படத்துக்காக மொத்தமாக தனது கால்ஷீட்டை ஒதுக்கிக் கொடுத்துள்ளாராம் திரிஷா. இதுவும் ஏற்கனவே நாம் சொன்ன விஷயம்தான்.
More from Filmibeat
யாவரும் கேளிர் கமல்ஹாசன் மாதவன் அன்பே சிவம் நள தமயந்தி yaavarum kelir kamal hassan madavan anbe sivam nala damayanthi


Click it and Unblock the Notifications











