twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐபிஎல் அணியை வாங்கும் சல்மான் கான்

    By Staff
    |

    Salman Khan
    மும்பை: ஷாருக் கான், ப்ரீத்தி ஜிந்தா ஆகியோரை தொடர்ந்து ஐபிஎல் அணி வாங்கும் ஆசை பாலிவுட் ஹீரோ சல்மான் கானுக்கும் வந்துள்ளது. அதே போல அஜய் தேவ் கான், சஞ்சய் தத் ஆகியோரும் அணிகளை வாங்குவது தொடர்பாக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் துவக்கப்பட்ட ஐபிஎல் அமைப்பு வசூலில் கிரிக்கெட் உலகை புரட்டி போட்டது. இதில் விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஷாருக் கானும், கிங் லெவன் பஞ்சாப் அணியை ப்ரீத்தி ஜிந்தாவும் வாங்கியுள்ளனர்.

    இவர்களை அடுத்து பல சினிமா நட்சத்திரங்களுக்கும் ஐபிஎல் அணியை வாங்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீசன் 4ன் போது அணிகளின் எண்ணிக்கை மேலும் இரண்டாக அதிகரிக்கும் என ஐபிஎல் அமைப்பும் தெரிவித்திருப்பதால் இவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள துடித்து வருகின்றனர்.

    இவர்களில் முதல் ஆளாக மும்பையில் ஐபிஎல் தலைவர் லலித் மோடியை சென்று சந்தித்துள்ளா சல்மான் கான்.

    இந்த சந்திப்பு குறித்து லலித் மோடி கூறுகையில்,

    சல்மான் ஐபிஎல் அணியை வாங்கும் முடிவில் உறுதியாக உள்ளார். அதற்காக செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்து கேட்டு அவர் என்னிடம் அறிந்து கொண்டார்.

    புதிய அணிகளுக்கான டெண்டர் வரும் டிசம்பரில் அறிவிக்கப்படும். இதற்கான ஏலம் ஜனவரி 2010ல் நடக்கும். இதில் அதிகபட்ச தொகைக்கு கேட்பவர்களுக்கு அணி கொடுக்கப்படும். ஏலத் தொகையை அடிப்படையாக வைத்து அந்த அணிக்கு ஆமதாபாத், நாக்பூர், விசாகப்பட்டிணம் போன்ற பெயர்கள் வைக்கப்படும் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X