twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மக்கள் இயக்கம் தொடங்கிய விஜய்

    By Staff
    |

    Vijay
    நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார். புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த மக்கள் இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார்.

    அடுத்தபடியாக அரசியலுக்கு வருவோர் பட்டியலில் விஜய் முதலிடத்தில் இருக்கிறார். சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடியபோது, மக்களுக்காக இயக்கம் தொடங்கப் போவதாக அவர் கூறியிருந்தார். அரசியலுக்கான முதல் படி இது என்று கருதப்படுகிறது.

    அதன்படி புதுக்கோட்டையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மக்கள் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார் விஜய்.

    புதுக்கோட்டை அய்யனார் திடலில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மைய துவக்க விழா நடந்தது.

    விழாவுக்கு விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தாங்கினார். கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை நடிகர் விஜய் திறந்து வைத்தார்.

    ஏழைகளுக்கு இலவச தையல் மெஷின், சலவைப்பெட்டி, ஊனமுற்றவர்களுக்கு 3 சக்கர சைக்கிள்களை வழங்கி பேசுகிறார். அப்போது மக்கள் இயக்கம் பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

    பின்னர் விஜய் பேசுகையில்,

    என்னிடம் உள்ள சமூக சிந்தனை ரசிகர்களாகிய உங்களிடம் உள்ளது. உங்களிடம் உள்ள சமூக கண்ணோட்டம் என்னிடம் உள்ளது. நான் 50 ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால் நீங்கள் 5 ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறீர்கள்.

    நான் 100 ஏழை குழந்தைகளுக்கு மோதிரம் போட்டால் நீங்கள் 10 குழந்தைகளுக்கு போடுகிறீர்கள். அதே போல் பள்ளி மாணவர்களை படிக்க வைக்கிறீர்கள்.

    ஏழை மாணவ, மாணவிகள் பயில இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை திறந்து வைக்கிறீர்கள். நீங்கள் செய்யும் நல்ல காரியத்தால் எனக்கும் நல்ல பெயர் வாங்கி கொடுக்கிறீர்கள்.

    உங்களின் வேண்டுகோளை ஏற்று தான் இந்த இயக்கத்தை ஆரம்பித்து உள்ளேன். இந்த இயக்கத்தை தலைமை ஏற்று நடத்த ஆர்வமாக உள்ளது. நான் பிறந்த மண்ணிற்கு ஏதாவது செய்ய வேண்டும். நான் உங்களுக்கு தலைவராக இருந்து உங்களுக்காக பாடு படுவேன்.

    ஏன் இந்த இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றக்கூடாது என்று கேட்டனர். நான் பிளஸ்-2 படித்து முடிக்கும் போது நான் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதை என் தந்தையிடம் கூறினேன். அதற்காக பெரிய போராட்டமே நடந்தது.

    அதற்கு என் தந்தை என்னிடம் நீ நடிகன் ஆக வேண்டுமானால் அதற்கு உன்னை நீ தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்றார். இதற்காக நான் 6 மாதம் கடினமாக உழைத்தேன். நாளை தீர்ப்பு என்ற படத்தில் முதலில் நடித்தேன்.

    அப்பா ஒத்தையடிப் பாதை - நான் தார் ரோடு..

    எனது அப்பா லேசான கோடு கிழித்து ஒத்தையடி பாதை காட்டினார். நான் அதை தார் ரோடாக மாற்றினேன். பின்பு அதனை ஹைவே ரோடாக மாற்றினேன். மீண்டும் உழைத்து அதை 6 வழி சாலையாக மாற்றி உழைத்து வருகிறேன்.

    எனது பாதை கடினமானது. பல சறுக்கல்கள், கிண்டல்கள் இருந்தன. இதையும் தாண்டி உங்கள் முன் வந்துள்ளேன். நான் எதில் காலை வைத்தாலும் அதில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியும், வேகமும் இருக்கும்.

    விழுவதற்கு முன் ஆழம் பார்க்க வேண்டும்...

    அரசியல் என்பது சினிமா கதை போன்றது அல்ல. சினிமா என்பது ஒரு சிறிய வட்டம். ஆனால் அரசியல் என்பது ஒரு பெரிய கடல். அந்த கடலில் விழுவதற்கு முதலில் ஆழத்தை பார்க்க வேண்டும்.

    நான் தற்போது பல தலைவர்களின் புத்தகங்களை படித்து வருகிறேன். இந்த இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும், ஒரு லட்சம் உறுப்பினர்களையும், நகர, வட்டங்கள் சார்பில் 50 ஆயிரம் உறுப்பினர்களையும், கிளை மன்றங்களின் சார்பில் 5 ஆயிரம் உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும்.

    இந்த இயக்கம் எப்படி வரும். எப்படி நடக்க வேண்டும் என்பது எனக்கு தெரியாது. நீங்கள் மனது வைத்தால் இந்த இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும். அப்போது என் குடும்பம் என் தொழிலை விட இந்த கட்சியை பெரிதாக எண்ணி உழைப்பேன். அது உங்கள் கையில் தான் உள்ளது என்றார்.

    விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பேசுகையில்,

    நான் பல புரட்சி படங்களை தயாரித்துள்ளேன். அதில் அநியாயங்களை தட்டி கேட்கும் கதை அதிகமாக இருக்கும். இதனால் நாடு மாறவில்லை. இதற்காக யாரும் என்னை பாராட்டியதும் இல்லை. இது என் மனதில் எழுச்சியாக இருந்தது.

    இதனால் என் மகனை நடிக்க வைத்து அதன் மூலம் எழுச்சியை கொண்டு வந்தேன். இதற்காக ஒரு அமைப்பை ஆரம்பித்தேன். அது மக்கள் இயக்கமாக மாறி உள்ளது.

    இதற்கும், ரசிகர் மன்றத்திற்கும் சம்பந்தம் இல்லை. இது எந்த அரசியல் கட்சிக்கும் போட்டியானது அல்ல. எந்த அரசியல் கட்சிக் கும் சார்பான இயக்கம் அல்ல. இந்த இயக்கத்தில் உள்ள நிர்வாகிகள் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

    உறுப்பினர்களை சேர்ப்பதை பொறுத்து தான் உங்களின் கனவு நினைவாகும். உண்மையான உணர்வு உள்ளவர்கள் மட்டும் இதில் சேரலாம் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X