Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
காரைக் கவுத்திட்டீங்களேப்பா!
கடும் குடிபோதையில் நடிகர்கள் பிரேம்ஜியும், விஜய் வசந்த்தும் பயணம் செய்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோரம் கவிழ்ந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரைப் போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் வசந்த், காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்தகுமாரின் மகன் ஆவார். இவர் நாடோடிகள், சென்னை 600028 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை, பசுல்லா சாலை சந்திப்பில் ஒரு பிரமாண்ட பிஎம்டபிள்யூ கார் கவிழ்ந்து கிடந்தது. இதைப் பார்த்த அப்பகுதியினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து காரை மீட்டு அதுகுறித்து விசாரித்தபோது அந்தக் கார், வசந்தகுமார் எம்.எல்.ஏ.வுக்குச் சொந்தமானது என்று தெரிய வந்தது. மேலும் காரில் நடிகர்கள் பிரேம்ஜியும், விஜய் வசந்த்தும் இருந்ததாகவும், இருவரும் நல்ல குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் காரை அவர்கள் ஓட்டவில்லை. டிரைவர்தான் ஓட்டி வந்தார். வேகமாக காரை ஓட்டுமாறு இரு நடிகர்களும் வற்புறுத்தியதால் வேகமாக காரை ஓட்டி அது சாலையோரம் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் டிரைவர் அக்பர் அலி காயமடைந்துள்ளார். அவரை போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இருப்பினும் இதுதொடர்பாக பிரேம்ஜி, விஜய் வசந்த் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை.
என்ன கொடுமை சார் இது, இப்படியா விபத்து ஏற்படுவது போல ஓட்டுவது?