twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மன உளைச்சல் நீங்கியது-பிரஷாந்த்

    By Staff
    |

    Prasanth wtih Grahalakshmi
    என் மீது கிரகலட்சுமி கூறிய அனைத்துப் புகார்களும் பொய்யானவை என்று காவல்துறை கூறி விட்டது. இப்போதுதான் நிம்மதியாக உணர்கிறேன். கிரகலட்சுமியால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கியுள்ளது என்று நடிகர் பிரஷாந்த் கூறியுள்ளார்.

    நடிகர் பிரஷாந்த் மீது அவரது மனைவி கிரகலட்சுமி கூறிய வரதட்சணை கொடுமை புகார்கள் அனைத்தும் போலியானவை என்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 750 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நிம்மதி தெரிவித்துள்ளார் பிரஷாந்த். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், வரதட்சணையாக கார் கேட்டதாக புகாரில் கிரகலட்சுமி கூறியுள்ள போதிலும், காரை கேட்டது யார் என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.

    எங்கள் திருமணம் நடைபெற காரணமாக இருந்த டாக்டர் ரங்கபாஷ்யத்திடம் போலீசார் நடத்திய விசாரணையில், எங்கள் திருமணத்தின் போது கிரக லட்சுமியின் சொத்து விபரம் குறித்து எதுவும் கேட்கப்படவில்லை என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

    மேலும், எங்கள் வீட்டில் ஹைடெக் டாய்லெட் தான் இருக்கிறது. அதனை கவிதா என்பவர் பராமரிக்கிறார். ஒருபோதும் கிரகலட்சுமியை டாய்லெட் சுத்தம் செய்யுமாறு சொன்னதில்லை என்று கவிதா போலீசாரிடம் கூறியுள்ளார்.

    மேலும், என்னுடைய தாயார் சாந்தி சைவ உணவுதான் சாப்பிடுபவர். எனவே கிரகலட்சுமியை அசைவ உணவு சாப்பிடுமாறு கட்டாயப் படுத்தவில்லை.

    கிரகலட்சுமி தான் வீட்டு காவலாளி அன்புரோஸ் என்பவரிடம் அசைவ உணவு வாங்கிவரச் சொல்லி சாப்பிட்டார் என்பது அன்புரோஸிடம் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

    திருமணத்திற்குப் பிறகு தன்னை வெளியே அழைத்துச் செல்லவில்லை என்ற கிரகலட்சுமியின் புகாரும் தவறானது.

    பச்சைமலை என்ற இடத்தில் நடந்த 'தகப்பன்சாமி" படப்பிடிப்பின் போதும், திருப்பதியில் நடந்த 'ஜாம்பவான்" படப்பிடிப்பின் போதும் மனைவியை என்னுடன் அழைத்துச் சென்றேன்.

    குடும்பத்தினர் எவரும் தன்னை பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்ற கிரகலட்சுமியின் குற்றச்சாட்டும் தவறானது.

    கிரகலட்சுமியின் சகோதரர் பொன் குமார் தனது மனைவியுடன் வாரம் ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்து கிரக லட்சுமியை சந்தித்து பேசுவது வழக்கம்.

    பெற்றோருடன் பேச அனுமதிக்கவில்லை என்ற கிரகலட்சுமியின் புகாரும் தவறானது. அவருக்கு தனியாக செல்போன் வாங்கி தந்துள்ளேன். ஏற்கனவே அவரும் ஒரு செல்போன் வைத்திருந்தார். இந்த 2 செல்போன்களில் பெற்றோருடன் கிரகலட்சுமி பேசியிருப்பது போன் பில்கள் மூலம் உறுதியாகியுள்ளது.

    எனக்கு எதிராக தொடுக்கப்பட்ட வரதட்சணைப் புகார் பொய்யானது என்பது போலீஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக எனக்கு இருந்து வந்த மன உளைச்சல் நீங்கி என் மீதான களங்கம் துடைக்கப்பட்டுள்ளது.

    பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமையை தடுக்க கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தின் 498 -ஏ பிரிவு அப்பாவி ஆண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு என் மீதான வழக்கே உதாரணம்.

    என்னிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் எனக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு கூறியதுடன், என்னுடைய தொழிலுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே அபாண்டமாக என்மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. ஆனால், அது பொய்யானது, ஜோடிக்கப்பட்டது என்பது விசாரணையின் முடிவில் தெரியவந்துள்ளது.

    கிரகலட்சுமியிடம் வளரும் என்னுடைய மகனை அழைத்துக்கொள்ள சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். தவறான சூழ்நிலையில் என்னுடைய மகன் வளர்ந்தால் அவனுடைய எதிர்காலம் பாதிக்கும் என்றார் பிரஷாந்த்.

    கிரகலட்சுமியின் வரதட்சணை கொடுமை புகார் பொய்-போலீஸ்

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X