»   »  அடக்கி வாசிக்க ரஜினி உத்தரவு

அடக்கி வாசிக்க ரஜினி உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rajini

குசேலன் படத் தயாரிப்பாளர்களிடம் படோடபமாக படத்தை எடுக்க வேண்டாம். பட்ஜெட் முதல் விற்பனை வரை மகா அடக்கமாக இருக்க வேண்டும் என அட்வைஸ் செய்துள்ளாராம் ரஜினிகாந்த்.

ரஜினி படம் என்றாலே மெகா பட்ஜெட், மகா விற்பனை என்றாகி விட்டது. சந்திரமுகி வாரிய வசூலைத் தொடர்ந்து சிவாஜியும் பெரும் வசூலை அள்ளியது. ஆனாலும், விநியோகஸ்தர்கள் பலருக்கு இது லாபத்தைக் கொடுக்கவில்லை.

பல விநியோகஸ்தர்களும் படம் தங்களது கையை கடித்து விட்டதாக புலம்பவே அது ரஜினியை சலசலப்பில் ஆழ்த்தி விட்டது.

இந்த நிலையில் இனிமேலும் அப்படி ஒரு அப்செட் விநியோகஸ்தர்களுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக குசேலன் படத் தயாரிப்பாளர்களுக்கு சில அட்வைஸ்களைக் கொடுத்துள்ளாராம் ரஜினி.

அதாவது படத்துக்காக பெரிய பட்ஜெட் போட வேண்டாம். தேவையில்லாமல் ஆடம்பர செலவுகளை வைத்துக் கொள்ள வேண்டாம். ரொம்பத் தேவை என்றால் மட்டும் செலவு செய்யுங்கள்.

எனது பெயரைப் பயன்படுத்தி தாறுமாறாக படத்தை விற்று விடக் கூடாது என்று ஏகப்பட்ட கண்டிப்பு கலந்த அட்வைஸைக் கொடுத்துள்ளாராம் ரஜினி.

அதிக விலைக்கு படத்தை விற்று, பின்னர் விநியோகஸ்தர்கள் வருத்தப்படக் கூடிய நிலை வந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில்தான் இந்த அட்வைஸ்களை அள்ளித் தெளித்துள்ளாராம் ரஜினி.

ரோபோட்டுக்கும் இந்த கண்டிஷன்கள் பொருந்துமா என்று தெரியவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil