»   »  எக்சர்ஸைஸின்போது தனுஷ் காயம்

எக்சர்ஸைஸின்போது தனுஷ் காயம்

Subscribe to Oneindia Tamil
Dhanush
உடற்பயிற்சி செய்தபோது நடிகர் தனுஷ் காயமடைந்தார்.

செவ்வாய்க்கிழமை மாலை தனுஷ் தனது வீட்டுக்கு அருகே உள்ள ஜிம்முக்கு உடற்பயிற்சி செய்ய சென்றார். அப்போது எடையைத் தூக்கி உடற்பயிற்சி செய்தபோது கை தவறி அவரது மூக்கின் மீது ஒரு எடைக் கல் விழுந்தது. இதில் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டது.

மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியதால் உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார். அவரது மூக்கு எலும்பில் சேதம் ஏதும் இல்லை என்றும் ஒரு நாளில் காயம் ஆறி விடும் எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளை யாரடி நீ மோகினி படப்பிடிப்பு நடக்கவுள்ளது. மூக்கில் ஏற்பட்ட காயம் சாதாரணமானதுதான் என்றும் திட்டமிட்டபடி படப்பிடிப்புக்குப் போகப் போவதாகவும் தனுஷ் கூறியுள்ளார்.

இப்படம் முடிந்ததும் 3 மாதம் ஓய்வெடுக்கவுள்ளார் தனுஷ். அதன் பின்னர் பொல்லாதவன் இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் ஏப்ரல் மாதத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil