Don't Miss!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சினிமாவில் காதலிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம்! - வில்லாளன் ஹீரோ
வில்லாளன் படத்தில் கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார் வெற்றிவேல். நடித்ததோடு மட்டும் அல்லாமல் இயக்குநர் சூரியனோடு சேர்ந்து படத்தை இயக்கவும் செய்திருக்கிறார்.
யார் இந்த வெற்றி வேல்?
நங்கநல்லூர் வெற்றி தியேட்டர் உரிமையாளர். இன்னும் சுலபமாக இவரைத் தெரிந்து கொள்ள... முன்னாள் எம்எல்ஏவும் திமுகவின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவருமான கண்டோன்மெண்ட் சண்முகத்தின் மகன் இவர்!
"நடிக்கனும்னு முதலில் நினைக்கலை. படம் டைரக்ட் பண்ணனும் என்று முடிவு செய்தேன். ரொம்ப அருமையான கதை இது.
போலீஸ் கதை. போலீஸ் அதிகாரி வேடத்துக்குப் பொருத்தமான நடிகரை தேர்வு செய்ய பலரை அழைத்துப் பார்த்தோம். சரியாக கிடைக்கவில்லை. அப்போது ஏன் வெளியே நடிகரை தேடனும் நீயே நடின்னு என்னை நடிக்கச் சொன்னார்கள், இந்தப் படத்தை என்னோடு சேர்ந்து இயக்கும் சூரியனும், கதை எழுதிய என் மாமாவும்.
நான் அப்போ ஒத்துக்கலை. என்னால முடியாதுன்னு சொல்லிட்டேன். வீட்ல செல்லப் பிள்ளையா வளர்ந்ததால கொஞ்சம் குண்டா இருந்தேன். போலீஸ் கேரக்டருக்கு பொருத்தமாத்தான் இருக்கும் பண்ணுன்னு சொன்னாங்க. அவுங்க சொன்னதை அப்படி யோசித்து பார்த்தேன். சரி, செய்து பாத்துடலாம்னு முதல்ல பாண்டியன் மாஸ்டரிடம் சென்று என் உடம்பை குறைக்க ஆரம்பித்தேன். ஒரு வருடம் அதுக்கா நிறைய மெனக்கெட்டு அதன் பிறகுதான் நடிக்க வந்தேன்..." என்று நீண்ட விளக்கம் தந்தார் தான் நடிக்க வந்ததற்கு.
சரி.. சினிமா அனுபவம் எப்படி இருந்தது?
மற்ற காட்சிகள்ல நடிக்கிறதுல பிரச்சினை ஒண்ணுமில்லை. ஆனா காதல்தான் கஷ்டமா இருந்தது. காதல் காட்சியில் முதல்ல நடிக்கும் போது நிறைய தயக்கம் இருந்தது. என் வாழ்க்கையில் அந்த மாதிரி எல்லாம் பேசி பழகியது கூட கிடையாது.
மற்ற காட்சிகளில் இயல்பா இருந்த நான், இந்த காதல் காட்சி வரும்போது மட்டும் நடிக்கிற மாதிரி செயற்கையா தெரிவதா செட்டில் எல்லோரும் சொன்னாங்க. ஒரு வழியா சமாளிச்சிட்டேன். ஆனா அடுத்த படத்துல கலக்கிடுவேன்..!" என்கிறார்.
அடுத்த இரண்டு புதிய படங்களுக்கும் டிஸ்கஷன் ஆரம்பித்துவிட்டாராம் வெற்றி வேல்.
எப்படியோ, தியேட்டர் கிடைக்கலேன்னு சொல்ல வேண்டிய அவசியம் இவருக்கு இருக்காது!