»   »  ஜெயராமுக்கு கோபிகாவின் 'உதவி'

ஜெயராமுக்கு கோபிகாவின் 'உதவி'

Subscribe to Oneindia Tamil
Jayaram with Jyothirmayi

மலையாளத்தில் டாப் ஸ்டாராக விளங்கிக் கொண்டிருக்கும் கோபிகா, மார்க்கெட் சரிவால் தடுமாறிக் கொண்டிருக்கும் ஜெயராமுடன் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து பின்னர் மீண்டும் மலையாளத்துக்கே மாறி விட்ட கோபிகா அங்கு படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் புதிதாக ஜெயராமுடன் வெருத்தே ஒரு பார்யா என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

மலையாளத்தில் கோபிகா முன்னணியில் இருக்கிறார் என்றால், மறுபக்கம் ஜெயராம், மார்க்கெட் சரிவால் திணறிக் கொண்டிருக்கிறார். எனவே கோபிகா, ஜெயராம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதை பெரிய உதவியாக மலையாளத் திரையுலகில் கருதுகிறார்கள்.

பிப்ரவரி 15ம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறதாம். ஜெயராமும், கோபிகாவும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை என்பதால் இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிஷ்குமார் திரைக்கதை எழுத, அக்கு அக்பர் இயக்குகிறார்.

இந்த நிலையில், ஜெயராமுக்கு தமிழில் ஏராளமான கேரக்டர் ரோல் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாம். பிரிவோம் சந்திப்போம் படத்தில் அட்டகாசமான டாக்டர் வேடத்தில் நடித்ததால், அவரைத் தேடி அதுபோன்ற அருமையான கேரக்டர்கள் வரத் தொடங்கியுள்ளனவாம். நல்ல கேரக்டர்களாகப் பார்த்து நடிக்கப் போவதாக ஜெயராம் கூறுகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil