»   »  குசேலனில் கமல்?

குசேலனில் கமல்?

Subscribe to Oneindia Tamil
Kamala Hasan

ரஜினிகாந்த்தின் குசேலன் படத்தில் ஒரு சீனில் கமல்ஹாசனை தோன்ற வைக்க இயக்குநர் பி.வாசு முயன்று வருவதாக கூறப்படுகிறது.

கே.பாலச்சந்தரின் கவிதாலயா, மலையாள தயாரிப்பாளர் விஜயக்குமார் இணைந்து தமிழில் தயாரிக்கும் படம் குசேலன். பி.வாசு இயக்க, ரஜினிகாந்த், பசுபதி, நயனதாரா நடிக்கவுள்ளனர்.

ரஜினியுடன் 3வது முறையாக ஜோடி சேருகிறார் நயனதாரா. பசுபதிக்கு படத்தில் முக்கிய வேடம். வடிவேலுவும், நாசரும் படத்தில் இடம் பெறுவார்கள் எனத் தெரிகிறது. தெலுங்கிலும் இப்படம் ஒரே நேரத்தில் தயாராகிறது.

இப்படத்தில் ஒரு முக்கிய காட்சியில் கமல்ஹாசன் தோன்றவிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் கதைப்படி ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் நடிகராக வருகிறார். அவருக்கு விருது வழங்கும் காட்சி ஒன்று வருகிறதாம். அதில்தான் கமல்ஹாசனை தோன்ற வைக்க பி.வாசு முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக கமல்ஹாசனை அவர் அணுகியுள்ளதாக தெரிகிறது.

கமல்ஹாசன் தவிர மற்ற விக்ரம், விஜய், அஜீத் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், நடிகைகளையும் அந்தக் காட்சியில் தோன்ற வைக்க பி.வாசு யோசித்துள்ளாராம். அப்படி நடந்தால் நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாக இருக்கும்.

குசேலன் படத்தில் நடிக்கும் கலைஞர்கள் தேர்வு படு வேகமாக நடந்து வருகிறது. சைட் பை சைடாக தெலுங்குப் பதிப்புக்கான கலைஞர்கள் தேர்வும் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். ரஜினி இமயமலையிலிருந்து திரும்பிய பின்னர் கலைஞர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு முறைப்படி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

ஆனால், இதுகுறித்து இன்று கமல்ஹாசனிடம் நாம் கேட்டபோது, அப்படியா, நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும். அப்படி ஏதாவது இருந்தால் நிச்சயம் உங்களுக்குத் தெரிவிப்பேன் என்று பதிலளித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil