For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  'ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே...': நர்த்தகி ஹீரோவுக்கு குவிந்த பாராட்டுகள்

  By Shankar
  |

  நர்த்தகி படத்தில் சிறு வயது திருநங்கையாக நடித்த அஸ்வினுக்கு பாராட்டுகள் குவிகிறது. அவருடன் படித்த சக தோழிகளே போனிலும் நேரிலும், ஏய் நீ எங்களை விட ரொம்ப அழகா இருக்கே என்கிறார்களாம்.

  சமீபத்தில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் நர்த்தகி படத்தில் சிறுவயது கல்கியாக நடித்தவர் அஸ்வின். ஒரு ஆண் மெல்ல மெல்ல பாலுணர்வு பிறழ்ந்து பெண்ணாக மாறுகிற வேடத்தில் நடித்திருக்கிறார் இவர். இந்த கேரக்டரில் நடித்த அஸ்வினுக்கு படம் பார்த்தவர்கள் அத்தனை பேரும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  இந்த வேடத்தில் நடித்தது குறித்தும், இதற்காக எடுத்துக் கொண்ட பயிற்சிகள் குறித்தும் அஸ்வின் கூறுகையில், "யாருமே இந்த மாதிரி கேரக்டரில் நடிக்க யோசிப்பார்கள். ஆனால் என் தந்தை என்னை மிகவும் உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார்.

  நான் இப்போது ப்ளஸ் 2 படித்து வருகிறேன். சிறுவயதில் என்னை பார்த்த இயக்குநர் தங்கர்பச்சான் தனது ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் சத்யராஜ் சாரின் பேரனாக நடிக்க வைத்தார்.

  அதன்பின் திருப்பூர் செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் பெத்தான் சாமி இயக்கத்தில் குருகுலம் என்ற படத்தில் தனி ஹீரோவாக நடித்து வருகிறேன்.

  எனது போட்டோவை பார்த்த இயக்குநர் விஜயபத்மா நேரில் வரவழைத்தார்.

  அழகான ஆண்மகனைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். அதற்கு நீ பொருத்தமாக இருக்கிறாய் என்று கூறி இந்த கதையை சொன்னார். அப்போதே முடிவு செய்தேன், இது சவாலான கேரக்டர் என்று. என்னுடைய அப்பாவும்,அம்மாவும் எங்கெங்கோ அலைந்து லிவிங் ஸ்மைல் வித்யா என்ற திருநங்கை எழுதிய புத்தகத்தையும், திருநங்கைகள் உலகம் என்ற புத்தகத்தையும் வாங்கி வந்து என்னிடம் படிக்க கொடுத்தார்கள்.

  அதுமட்டுமல்ல, சுமார் பத்து திருநங்கைகளை என் வீட்டிற்கே வரவழைத்து ஒரு வாரம் தங்க வைத்திருந்தார்கள்.

  அவர்களின் நடை, மற்றும் குணாதிசயங்களை பார்த்துப் பார்த்து பழக சொன்னார்கள். திருநங்கைகளின் நடையே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அவர்கள் கழுத்தை வளைத்து பார்ப்பது கூட தனி பாணியாக இருக்கும். நானும் அதை அப்படியே கற்றுக் கொண்டேன். இப்படி ஒரு செயலை செய்ய முன்வந்த என் பெற்றோர்களுக்குதான் நான் இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டும்.

  நடிக்க போவதற்கு முன்பே இப்படி என்றால் படப்பிடிப்பில் கேட்கவே வேண்டாம். சுமார் பதினெட்டு திருநங்கைகளுடன் நானும் ஒரு தம்பியாக பழகினேன்.

  நான் படிக்கிற பள்ளிக்கூடம் ஆண்,பெண் இருபாலரும் படிக்கக்கூடியது. எனக்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள். அத்தனை பேரும் நர்த்தகி பார்த்துவிட்டு சொன்னது: "ஏய்... நீ எங்களை விட அழகா இருக்கேடா...."

  English summary
  Ashwin has won the appreciation of critics for playing a young boy who undergoes physical and emotional changes when he wants to become a transgender, in the just-released movie Narthaki. 'All credit goes to my director Vijay Padma. She saw my photographs and urged me to do the role. Enough rehearsals were given before the shoot,' he says.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more