twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷாருக் ஆபீ்ஸ்-கட்ட ரூ. 56 கோடி நிலம்

    By Staff
    |

    Shahrukh Khan
    சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், தனது ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மெய்ன்ட் நிறுவனத்திற்காக ரூ. 56 கோடி மதிப்பிலான இடத்தை வாங்கியுள்ளார்.

    மும்பையின் கர் பகுதியில், அலுவலகத்திற்கான இடத்தைப் பார்த்துள்ளார் ஷாருக்கான். தற்போது முழு வீச்சில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.

    பழம்பெரும் தயாரிப்பாளர் பி.ஆர். சோப்ராவின் அலுவலகத்திற்கு மிக அருகே ஷாருக்கானின் அலுவலகம் அமையவுள்ளது. இந்த இடத்தை ரூ. 56 கோடி கொடுத்து வாங்கியுள்ளாராம் ஷாருக்.

    புதிய அலுவலகம் 40 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் அமையவுள்ளது. ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் கிராபிக்ஸ் டிசைனர்கள், பல் பிரிவு நிபுணர்கள், டெக்னீஷியன்கள் இந்தப் புதிய அலுவலக வளாகத்திலிருந்து பணியாற்றவுள்ளனர்.

    தற்போது தனது பந்த்ரா பங்களா மற்றும் அந்தேரியில் உள்ள லோகந்த்வாலா ஆகிய இடங்களில் தனது அலுவலகத்தை நடத்தி வருகிறார் ஷாருக்கான்.

    இதை ஒழுங்குபடுத்தி, ஒரே இடத்தில் அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வளவு விலை கொடுத்து இடத்தை வாங்கி பிரமாண்டமான அலுவலகத்ைத எழுப்புகிறார் ஷாருக்.

    தனது அலுவலகம் தான் விரும்பியபடி அமைய வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார் ஷாருக். இதனால் அலுவலகத்தைப் பார்த்து பார்த்து இழைத்து வருகிறாராம்.

    தினசரி சைட்டுக்குச் சென்று பணிகளைப் பார்வையிடுகிறார். காலை 5 மணிக்கே அங்கு போய் விடுகிறாராம்.

    கிரீஷ், நாஞ்சிபாய் படேல் ஆகியோரிடமிருந்து இந்த நிலத்தை வாங்கியுள்ளாராம் ஷாருக். முதலில் இங்கு அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்ட படேல், கிரீஷ் தீர்மானித்திருந்தனர். ஆனால் ஷாருக் வந்து நிலத்ைதக் கேட்கவும், அவருக்கு விற்று விட முடிவு செய்தனராம்.

    6 மாதங்களுக்கு முன்பே கிரையம் நடந்து விட்டதாம். இருப்பினும் 2 மாதங்களுக்கு முன்புதான் அலுவலகக் கட்டுமானப் பணிகள் தொடங்கியதாம்.

    இதில் இன்னொரு சுவாரஸ்யத் தகவல் - முதலில் இந்த இடம் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவரிடம் இருந்ததாம். பிறகு படேல், கிரீஷ் வாங்கியுள்ளனர். இப்போது ஷாருக்கிடம் வந்துள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X