twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சங்கத்தலைவர் பதவி வேண்டாம்; புதிய கட்டிடத்திற்கு இலவசமாக நடிக்கிறோம்: விஷால்

    By Mayura Akilan
    |

    சென்னை: நடிகர் சங்கத்தலைவர் பதவிக்கு ஒருபோதும் தான் ஆசைப்பட்டது இல்லை என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று காமராஜர் அரங்கில் நடிகர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலந்து கொள்ள, உறுப்பினர் பூச்சி முருகன் போலீஸ் பாதுகாப்புடன் வந்தார். அவரை சங்கத்தினர் உள்ளே அனுமதிக்கவில்லை. ''நான் சங்க உறுப்பினராக உள்ளேன்;
    நீதிமன்ற அனுமதியுடன் தான் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன். நான் உள்ளே செல்ல வேண்டும்,'' எனக்கூறி, அங்கு வைத்திருந்த, சங்க உறுப்பினர் வருகை பதிவில் கையெழுத்திட சென்றார். ஆனால், நடிகர் சங்கத்தின் மற்ற உறுப்பினர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    'உங்களுக்கு மட்டுமே, எங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியும். பதிவேடு சங்கம் தொடர்பானது; நீங்கள் தான் பேசி, கையெழுத்திட வேண்டும்' என, போலீசார் கூறியதால், பூச்சி முருகன், கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் திரும்பினார்.உடனடியாக தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் சென்ற அவர், 'நீதிமன்ற அனுமதியுடன் வந்தும் என்னை, கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க மறுத்து விட்டனர்.

    நீதிமன்ற உத்தரவை நடிகர் சங்க நிர்வாகிகள் மீறிவிட்டனர்' என, புகார் கொடுத்தார்.இதன் பிறகு, நிருபர்களிடம், பூச்சி முருகன் கூறுகையில்,''என்னை, சங்க பொதுக்குழு கூட்டத்தில், அனுமதிக்காதது குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்,'' என்றார்.

    நடிகர் சங்கக் கட்டிடம் தொடர்பாக சில நடிகர்களுக்கும், தற்போதைய சங்க நிர்வாகிகளுக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்தது. இந்த நிலைமையில் தற்போதைய தலைமையை எதிர்த்து நடிகர் விஷால் தலைமையில் இளைய நடிகர்கள் டீம் என்று செயல்பட்டு வந்தது.. இவர்களால் இன்றைய பொதுக்குழுவில் ஏதேனும் பிரச்சினைகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. நடிகர் விஷால் அமைதியாகி அடக்கமாகப் பேசினார்.

    நான் ஆசைப்படவில்லை

    நான் ஆசைப்படவில்லை

    "நான் நடிகர் சங்க தலைவராக வருவதற்கு ஆசைப்படவில்லை. நான் இங்கே யாருக்கும் போட்டியும் இல்லை. நடிகர் சங்கத்துக்கு சிறப்பான முறையில் கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அடுத்த பொதுக்குழு கூட்டத்தை புதிய கட்டிடத்தில்தான் நடத்த வேண்டும் என்றார்.

    இலவசமாக நடித்த நடிகர்கள்

    இலவசமாக நடித்த நடிகர்கள்

    மலையாள பட உலகில் நடிகர் சங்க கட்டிடத்துக்காக நடிகர்கள் இலவசமாக ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொடுத்து 15 கோடி ரூபாயை நிதியாகத் திரட்டி கொடுத்தார்கள்.

    நாங்களும் நடிக்கிறோம்

    நாங்களும் நடிக்கிறோம்

    அதுபோல் இங்கேயும் நான், ஆர்யா, கார்த்தி போன்றவர்கள் நடிகர் சங்கத்துக்காக இலவசமாக ஒரு படத்தில் நடிக்க தயாராக இருக்கிறோம். இதற்கான ஏற்பாடுகளை நடிகர் சங்கம்தான் முன் நின்று செய்ய வேண்டும். '' என்று கேட்டுக் கொண்டாராம் விஷால்.

    பாலையாவுக்கு விழா

    பாலையாவுக்கு விழா

    மறைந்த நடிகர் பாலையாவுக்கு, நுாற்றாண்டு விழா, நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் கலைச்சேவைக்கு பாராட்டு விழா நடத்துவது உட்பட, பொதுக்குழுவில், 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பொதுக்குழு கூட்டத்தில், ஆர்யா, ஜீவா உட்பட, பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் பங்கேற்கவில்லை.

    புதிய கட்டிடத்திற்கு சிக்கல்

    புதிய கட்டிடத்திற்கு சிக்கல்

    புதிய கட்டிடம் கட்ட இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அத்தடையை நீக்க முடியாத அளவுக்கு சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன என்கிறார்கள் நடிகர் சங்க பிரமுகர்கள். நடிகர் சங்கத்தலைவராக எம்.எல்.ஏ சரத்குமார் இருந்தும் இந்த பிரச்சினையை தீர்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை

    English summary
    The South Indian Artists Association convened its 62nd annual meeting on Sunday and passed some important resolutions.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X