ஓவர் அன்பை எதிர்பார்த்த ரசிகையை பிளாக் செய்த இளம் நடிகர்.. லைவில் வறுத்தெடுத்த தோழி!

சென்னை: ரசிகை ஒருவரை பிளாக் செய்ததால் அவரது தோழி நடிகர் ஹரிஷ் கல்யாணை லைவ் சேட்டில் வறுத்தெடுத்துள்ளார்.

பியார் பிரேமா காதால், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களில் நடித்திருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே ஹரிஷ் கல்யாணை ரசிக்க தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

இந்நிலையில் நேற்று ஹரிஷ் கல்யாண் நடிக்கும் தனுசு ராசி நேயர்களே போஸ்டர் வெளியானது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்தார்.

லைவ் சேட்

இந்த போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார் ஹரிஷ் கல்யாண். தொடர்ந்து தனது ரசிகர்களிடம் லைவில் சேட் செய்தார்.

பிளாக் செய்வீங்களா?

பிளாக் செய்வீங்களா?

அப்போது அவருடன் சேட் செய்த ரசிகை ஒருவர், உங்களின் அன்பை எதிர்பார்த்தால் பிளாக் செய்துவிடுவீர்களா? உங்களை சப்போர்ட் செய்பவர்கள்தான் உங்களுக்கு தேவையா? என கேட்டு கடுமையாக சாடினார்.

ஆதரவான வார்த்தைகள்தான்

ஆதரவான வார்த்தைகள்தான்

அதற்கு பதிலளித்த ஹரீஷ் கல்யாண், என்னையும் என் ரசிகர்களையும் விமர்சிக்காத வரை நான் யாரையும் பிளாக் செய்வது இல்லை என பதிலளித்தார். அதற்கு அந்த பெண் அவள் உங்களிடம் எதிர்பார்ப்பது ஒரு ஆதரவான வார்த்தைகளை தான் என்று பதிலளித்துள்ளார்.

நியாயம் கேட்ட தோழி

நியாயம் கேட்ட தோழி

இந்த கான்வேர்சேஷனின் மூலம் தனது அன்பை தீவிரமாக எதிர்பார்த்த ஒரு ரசிகையை நடிகர் ஹரீஷ் கல்யாண் பிளாக் செய்துவிட்டார் என தெரிகிறது. பிளாக் செய்யப்பட்ட அந்த பெண்ணிற்கு நியாயம் கேட்டு அவரின் தோழி ஹரிஷ் கல்யாணை வறுத்தெடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X