இறைவனை வேண்டுகிறேன் தலைவா.. ரஜினியை வாழ்த்திய விஜய்.. ஆனால் ஒரு ட்விஸ்ட் என்ன தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளியான திரைப்படம் கூலி. பெரிய எதிர்பார்ப்போடு படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க இந்த வருடத்தோடு ரஜினி திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதனையொட்டி அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்தினை சொல்லிவருகிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி திரைப்படம்தான் எங்கும் பேச்சாக இருக்கிறது. முதன்முறையாக அவர்கள் இரண்டு பேரும் இணைந்திருந்ததால் இமயமலை அளவுக்கு எதிர்பார்ப்பை வைத்துவிட்டார்கள். அதுமட்டுமின்றி பான் இந்தியா ரிலீஸ் என்பதால்; மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழிகளின் முன்னணி நட்சத்திரங்களையும் இந்தப் படத்தில் களமிறக்கியிருந்தார் லோகேஷ். இப்படி பல ஹைப்புகளுடன் கடந்த 14ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் ஆனது கூலி.

அட போங்க லோகேஷ்: கார்த்திக்கு கைதி, விஜய்க்கு மாஸ்டர், கமலுக்கு விக்ரம் என மெகா ஹிட்டை கொடுத்த லோகேஷ் ரஜினியை சும்மா விட்டுவிடுவாரா என்ன என்பதுதான் அனைவரது எண்ணமாக இருந்தது. ஆனால் எண்ணத்தில் எண்ணெய் ஊற்றி தீயை வைக்கும்படி இருந்தது படம். ஒரு சீனில்கூட ரசிகர்களால் கனெக்ட் ஆக முடியவில்லை. இது பத்தாது என்று அனிருத்தின் இசையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

A photo of Vijay congratulating Rajinikanth has caught everyone s attention
Photo Credit:

லாஜிக் ஓட்டைகளும், ரஜினியும்: இவை மட்டுமின்றி படத்தில் சுத்தமாக லாஜிக்குகளே இல்லை. ஸ்ருதிஹாசன் வீடியோ கால் பேசும் சீன், அமீர்கானின் க்ளைமேக்ஸ் கேமியோ உள்ளிட்ட பல சீன்கள் இப்போது மீம்ஸ்களாக சமூக வலைதளங்களில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. இது அனைத்தையும் மீறி படத்தில் உருப்படியாக இருந்த விஷயம் என்றால் அது ரஜினிதான். அவர்தான் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி பிடித்திருக்கிறார்.

50 வருடங்கள் நிறைவு: சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்து இந்த வருடத்தோடு 50 வருடங்கள் நிறைவடைகின்றன. அதனையோட்டி அரசியல் பிரமுகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் என பலரும் சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். அவர்களுக்கு ரஜினியும் நன்றி தெரிவித்தார். ஆனால் ரஜினிகாந்த்துக்கு விஜய் இன்னமும் வாழ்த்து சொல்லாதது பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.

என்ன காரணம்?: விஜய்க்கும், ரஜினிக்கும் கோலிவுட்டில் யார் நம்பர் ஒன் என்ற போட்டி நடந்துவருகிறது. இரண்டு பேரின் படங்களும் வசூலில் சண்டைதான் செய்துவருகின்றன. அதேபோல் இரண்டு பேரின் ரசிகர்களும் ஒருவரையொரு எதிரியாகத்தான் பார்க்கிறார்கள். முக்கியமாக ஜெயிலர் சமயத்தில் எல்லாம் இவர்களின் விவகாரம் பெரிய விவாதமாகவே மாறியது. அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே ஈகோ க்ளாஷ் உச்சத்தில் இருக்கிறது.

வாழ்த்திய விஜய்: இந்நிலையில் ரஜினியை விஜய் வாழ்த்திய புகைப்படம் ஒன்று கவனம் ஈர்த்திருக்கிறது. அதாவது ரஜினி திரைத்துறைக்கு வந்து 25 வருடங்களை நிறைவு செய்தபோது விஜய் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்தார். அப்போது சூப்பர் ஸ்டாரை வாழ்த்திய அவர், "தலைவா திரையுலகத்தில் நீ கால் பதித்து இது 25வது ஆண்டு. உன்னுடைய 50ஆவது ஆண்டு திரையுலக வாழ்க்கையிலும் இதேபோல் பூச்செண்டு கொடுத்து மகிழ இறைவனை வேண்டுகிறேன். ப்ரியமுடன் உங்கள் ரசிகன் விஜய்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படம்தான் ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டிருக்கிறது. இதனை கவனித்த சிலரோ 25வது ஆண்டுக்கு வாழ்த்திய விஜய்; 50ஆவது ஆண்டுக்கு வாழ்த்தாததற்கு ஈகோதான் காரணம் என சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Read more about: rajinikanth vijay coolie
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X