»   »  என் தலைக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது: சல்மான் கான்

என் தலைக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது: சல்மான் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தன் தலைக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டிருப்பதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் வெற்றி நாயகனாக உள்ளார் சல்மான் கான். அவர் நடிக்கும் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போடுகின்றன. அவர் நடித்துள்ள பிரேம் ரத்தன் தன் பாயோ இந்த மாதம் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் சல்மான் தன் மீதான வழக்குகள் பற்றி கூறுகையில்,

தீர்ப்பு

தீர்ப்பு

என் மீதான வழக்குகளின் தீர்ப்புகள் எப்படி இருக்கும். 5 ஆண்டுகளை சேர்த்தால் 10 முதல் 15 ஆண்டுகள் ஆகிவிடும். அது தான் என் பெற்றோருக்கு மிகப்பெரிய கவலை, எனக்கும் தான். வழக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அல்ல உயர் நீதிமன்றத்தில் உள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸ்

இத்தனைக்கும் நடுவே நான் காமெடி செய்ய வேண்டும், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும். அதே சமயம் என் தலைக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது.

வழக்கு

வழக்கு

நான் எவ்வளவு நல்லது செய்தாலும் மக்கள் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது தான் என் வேலையின் சிறப்பு அம்சம். சல்மான் மீது பல வழக்குகள் உள்ளன ஆனாலும் அவர் ஜாலியாக உள்ளார். சோனமுடன் ரொமான்ஸ், ஜாக்குலினுடன் டான்ஸ், போலந்தில் ஷூட்டிங், ரூ.600 கோடி வருவாய் தான் அனைவருக்கும் தெரிகிறது. நான் படும்பாடு யாருக்கும் தெரியவில்லை என்றார் சல்மான்.

கார்

கார்

சல்மான் மும்பையில் குடிபோதையில் காரை ஓட்டி சாலையோரம் படுத்திருந்தவர் மீது ஏற்றிக் கொன்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இது தவிர சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தது, மான் வேட்டையாடியது ஆகிய வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

English summary
Bollywood superstar Salman Khan is a worried man. Despite all the success he has achieved in the film industry and despite the huge fan following, the impending verdict of his court cases is always at the back of his mind.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil