»   »  விஜய் 60 படத்திலும் ஒரு 'தெறி' கூட்டணி: எதுன்னு கண்டுபிடிங்க

விஜய் 60 படத்திலும் ஒரு 'தெறி' கூட்டணி: எதுன்னு கண்டுபிடிங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் 60வது படத்திலும் தெறி கூட்டணி தொடர்கிறது. அதாவது தெறியை போன்றே இந்த படத்திலும் போலீசாக வருகிறாராம் மொட்டை ராஜேந்திரன்.

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இது விஜய்யின் 60வது படம் என்பதால் தற்காலிகமாக விஜய் 60 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

A Theri touch in Vijay 60

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி உள்பட 4 வில்லன்களாம். அத்தனை பேரையும் சமாளிக்க வேண்டியது அவர் சாமர்த்தியம்.

விஜய் 60 படத்திலும் தெறி கூட்டணி தொடர்கிறது. தெறி படத்தில் மொட்டை ராஜேந்திரன் போலீசாக வந்து விஜய்யுடன் இருப்பார். அதே போன்று விஜய் 60 படத்திலும் மொட்டை ராஜேந்திரன் போலீசாக வருகிறாராம்.

விஜய், மொட்டை ராஜேந்திரன் காமெடி கூட்டணி ஏற்கனவே ஒர்க்கவுட் ஆன நிலையில் இந்த படத்திலும் தொடர்வது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Mottai Rajendran has done kaki for Vijay 60 just like Theri.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil