»   »  அஜீத்தை கைகழுவி விட்டு வேறு ஒரு நடிகரின் ரசிகனாகிவிட்ட சிம்பு

அஜீத்தை கைகழுவி விட்டு வேறு ஒரு நடிகரின் ரசிகனாகிவிட்ட சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படங்களில் கூட அஜீத் ரசிகன்டா என்று வசனம் பேசிய சிம்பு தற்போது வேறு ஒரு நடிகரின் ரசிகராக நடித்து வருகிறாராம்.

நான் அஜீத் ரசிகன்டா என்று பெருமையாக கூறி வந்தவர் சிம்பு. இந்நிலையில் அவர் இனியும் தனது படங்களில் அஜீத் ரெபரன்ஸ் இருக்காது என்று அண்மையில் தெரிவித்தார்.


இதை பார்த்த அஜீத் ரசிகர்கள் கொந்தளிக்க அதற்கு தனி விளக்கம் அளித்தார்.


தல தல

தல தல

யாருமே அஜீத்தை கண்டுகொள்ளாதபோது நான் என் படத்தில் அவரை கொண்டாடினேன். தற்போது அவர் பெரிய நடிகராகிவிட்டார். அவரை தல தல என கொண்டாட பலர் உள்ளதால் நான் அவர் ரெபரன்ஸை விடுகிறேன் என்றார் சிம்பு.


பஞ்சாயத்து

பஞ்சாயத்து

அப்படி என்றால் நீங்கள் தான் அஜீத்தை கொண்டாடி வளர்த்துவிட்டீர்களாக்கும் என ரசிகர்கள் பொங்க நான் யாருப்பா அவரை தூக்கிவிட என கூறி அனைவரையும் அமைதிபடுத்தினார் சிம்பு.


சிம்பு

சிம்பு

சிம்பு தான் நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் வேறு ஒரு நடிகரின் ரசிகராக நடிக்கிறாராம். அவருடைய தந்தை டி. ராஜேந்தரின் ரசிகராகத் தான் நடிக்கிறாராம்.


மதுரை மைக்கேல்

மதுரை மைக்கேல்

மதுரை மைக்கேல் கதாபாத்திரத்தின் கெட்டப்பை பார்த்தால் டி. ஆர் நினைவு வருவதால் அந்த கதாபாத்திரம் தான் அவரின் ரசிகராக இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்தில் சிம்பு மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Simbu has reportedly ditched Ajith and acting as a fan of yet another actor in his upcoming movie Anbanavan Asaradhavan Adangadhavan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil