»   »  அமீர்கானை குலுங்கிக் குலுங்கி அழ வைத்த “மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா”!

அமீர்கானை குலுங்கிக் குலுங்கி அழ வைத்த “மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா”!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நட்சத்திரமான அமீர்கான் கல்கி நடித்துள்ள "மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா" திரைப்படத்தினைப் பார்த்துவிட்டு குலுங்கி, குலுங்கி அழுதுள்ளார்.

பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தி சிறந்த நடிகை உட்பட பல சர்வதேச விருதுகளை குவித்துள்ள படம் தான் "மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா".

 Aamir Khan Cried After Watching Margarita, With a Straw

இந்த படத்தின் டிரைலரை பார்த்தாலே மனம் அன்புடன் சேர்ந்த வலியால் மவுனமாக அழுகிறது.

சக்கர நாற்காலியே வாழ்க்கை:

உடல் வளர்ச்சி குன்றியதால் சக்கர நாற்காலியிலேயே வாழ்ந்து வரும் இளம் பெண்ணின் வாழ்க்கையை துளியும் சினிமாத்தனமின்றி வெகு இயல்பாக சித்தரித்துள்ள படம் இது.

கதை நாயகியாய் வாழ்ந்த கல்கி:

இதில் அந்த இளம் பெண்ணாக நடித்துள்ள கல்கி கொச்லின் சக்கர நாற்காலியில் முடங்கியிருக்கும் பெண்ணின் மன உணர்வுகளை மிக நுட்பமாக பிரதிபலித்துள்ளார்.

தாயின் வேடத்தில் ரேவதி:

அவரது தாயாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரேவதி நடித்துள்ளார். ஷோனாலி போஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

அப்படி என்னதான் இருக்கு:
"நீங்கள் கண்டிப்பாக இந்த படத்தைப் பார்க்க வேண்டும்" என்று தனது மனைவி கிரண் ராவ் கூறியதற்கு, "அப்படி அந்த சினிமாவில் என்ன விசேஷம் இருக்கிறது?" என்று கேட்ட அமீர் கான் இந்த படத்துக்கான சிறப்பு திரையிடல் ஒன்றை ஏற்பாடு செய்தார்.

பாலிவுட் பிரபலங்களுடன்:

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், இயக்குனர் ஷோனாலி உட்பட பலர் கலந்து கொண்ட இந்த திரையிடலில் நடிகை கல்கிக்கு பக்கத்து சீட்டிலேயே அமர்ந்து இப்படத்தை அமீர் கான் பார்த்துள்ளார்.

கதறி அழுது தீர்த்த அமீர்கான்:

திரைப்படம் முடிந்து விளக்குகள் போடப்பட்ட போது தான் அமீர்கான், தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுது கொண்டிருந்தது கல்கிக்கு தெரிய வந்தது.

என்ன வேண்டுமானாலும் செய்வேன்:

அழுதுக்கொண்டே "கல்கி இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காக நான் என்ன செய்ய வேண்டும்?" என்று அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார் அமீர்கான்.

17 ஆம் தேதி ரிலீஸ்:

மேலும், இது அனைவரும் பார்க்க வேண்டிய படம் இந்த படத்திற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வருகிற 17 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீசாகிறது.

English summary
Actress Kalki Koechlin said that though superstar Aamir Khan was forced by wife Kiran Rao to watch her film her upcoming film, Margarita, With a Straw, he couldn't stop "weeping" when he finally saw it.
Please Wait while comments are loading...