சினிமாவில் இருந்து விலக அமீர்கான் முடிவு... கண்ணீர் விட்டு கதறி அழுத மாஜி மனைவி

மும்பை : சினிமாவில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக பிரபல பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமீர் கான் இந்த முடிவை சொன்னதும் அவரது முன்னாள் மனைவி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

57 வயதாகும் நடிகர் அமீர் கான், நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர், டிவி பிரபலம், பின்னணி பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்து வருகிறார். 1973 களில் துவங்கி தற்போது வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அசிஸ்டென்ட் டைரக்டராக பாலிவுட்டிற்குள் அடியெடுத்து வைத்து, டாப் ஹீரோவாக உயர்ந்தவர்.

1986 ல் முதல் மனைவியான ரீனா தத்தாவை விவாகரத்து செய்த அமீர்கான், 2005 ல் கிரன் ராவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் கிரன் ராவையும் விவாகரத்து செய்வதாக அறிவித்தார் அமீர் கான். தற்போது இவர் நடித்து வரும் லால் சிங் சாத்தா படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவிலிருந்து விலக முடிவு

சினிமாவிலிருந்து விலக முடிவு

இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பேசிய அமீர் கான், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சினிமாவில் இருந்து விலகும் முடிவில் இருக்கிறேன். சினிமா தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்பதாக நினைக்கிறேன். குழந்தைகள் வளர்ந்து விட்டதால் சினிமாவில் இருந்து விலகும் முடிவை எடுத்தேன். ஆனால் என் மனைவி கிரன் கான் தான் என்னை சமாதானம் செய்து, அந்த முடிவை ஒத்திபோட வைத்தார்.

அமீர் கான் சொன்ன காரணம்

அமீர் கான் சொன்ன காரணம்

நான் சுயநலமாக என்னுடைய ஆற்றல் முழுவதையும் என்னுடைய வேலைக்காக செலவிடுவதாக உணர்கிறேன். என்னுடைய குடும்பத்திற்காக குறிப்பாக குழந்தைகளுக்காக அதிக நேரம் செலவிடுவதில்லை. நான் நடிகராக ஆனதில் இருந்து என்னை பற்றி மட்டும் தான் சிந்திக்கிறேன். எனக்காக குடும்பம் உள்ளது. கிட்டதட்ட 30-35 ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். ரசிகர்களின் மனங்களை இந்த பயணத்தில் ஜெயித்துள்ளேன்.

சினிமா என் குடும்பத்தை பிரித்தது

சினிமா என் குடும்பத்தை பிரித்தது

தற்போது 57 வயதாகிறது. என்னுடைய தவறை 86 வயதில் உணர்ந்து என்ன பயன். அதனால் தான் தற்போதே திருத்திக் கொள்ள நினைக்கிறேன். என் குழந்தைகள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளவில்லை. இது தான் பெரிய பிரச்சனை. சினிமா என்னை, என் குடும்பத்திடம் இருந்து வெகு தூரம் விலகி வைத்து விட்டதாக நினைக்கிறேன். இனி நடிக்க மாட்டேன். படம் தயாரிக்க மாட்டேன் என என் குடும்பத்தினரிடம் கூறினேன். அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சினிமா, குடும்பம் இரண்டையும் சமமாக கையாள முடியும் என என்னுடைய குழந்தைகள் சொன்னார்கள்.

கண்ணீர் விட்ட முன்னாள் மனைவி

கண்ணீர் விட்ட முன்னாள் மனைவி

முதலில் இந்த முடிவை வெளியிட வேண்டாம் என்று தான் நினைத்தேன். இப்போது ஓய்வை நான் அறிவித்தால் சிலர், நான் நடித்து ரிலீசாக உள்ள லால் சிங் சாத்தா படத்தின் விளம்பரத்திற்காக, படம் ஓட வேண்டும் என்பதற்காக சொல்கிறேன் என நினைப்பார்கள். நான் தவறு செய்வதாக எனது குழந்தைகளும் கிரனும் கூறினார்கள். நான் எனது முடிவை சொன்னதும் கிரன் கண்ணீர் விட்டு அழுதார். உன்னை பார்க்கும் போதெல்லாம் உனக்குள் இருக்கும் சினிமாவை பார்ப்பதாக கூறினார்.

மனதை மாற்றி குடும்பத்தினர்

மனதை மாற்றி குடும்பத்தினர்

கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைய நடந்து விட்டது. இந்த இரண்டு ஆண்டுகள் அனைவருக்குமே மிக கடுமையாக தான் இருந்தது. நிறைய நேரம் எடுத்து யோசித்தேன். எனக்குள் பெரிய மாற்றம் வந்துள்ளது. நான் குடிப்பதை கூட விட்டு விட்டேன். சினிமாவில் இருந்து விலகி குடும்பத்துடன் நேரத்தை செலவிட நினைத்தேன். ஆனால் என் குடும்பத்தினர் தான் என் மனதை மாற்றினார்கள் என்றார் அமீர் கான். அவர் நடித்துள்ள லால் சிங் சாத்தா படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார் அமீர் கான். இது ஹாலிவுட் படமான Forrest Gump படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X