»   »  வேண்டாம்டா மகனே நடிப்பு வேண்டாம்: சூப்பர் ஸ்டாரை எச்சரித்த குடும்பத்தார்

வேண்டாம்டா மகனே நடிப்பு வேண்டாம்: சூப்பர் ஸ்டாரை எச்சரித்த குடும்பத்தார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகனாக வேண்டாம் நல்ல வருமானம் வரும் வேலைக்கு போ என பாலிவுட் நடிகர் ஆமீர் கானை அவரது பெற்றோர்கள் எச்சரித்துள்ளனர்.

பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் ஆமீர் கான். தான் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அதனால் தான் பாலிவுட்டில் அவரை மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் என்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஆமீர் கானை அவரது பெற்றோர் நடிகனாக வேண்டாம் என எச்சரித்தது தெரிய வந்துள்ளது.

ஆமீர் கான்

ஆமீர் கான்

ஆமீர் கானின் தந்தை தாஹிர் ஹுசைன் பாலிவுட் இயக்குனர் ஆவார். அவரது உறவினர் நசீர் ஹுசைன் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருந்தவர். சினிமா துறையை சேர்ந்த தாஹிரே தனது மகனை வேறு தொழிலுக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

டாக்டர்

டாக்டர்

எனது பெற்றோருக்கு நான் நடிகன் ஆவது பிடிக்கவில்லை. அவர்களுக்கு நான் நிலையான வருமானம் வரும் டாக்டர், என்ஜினியர் அல்லது சி.ஏ.வாக ஆக விருப்பம் என ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.

நடிப்பு

நடிப்பு

பெற்றோரே தன்னை படித்து நல்ல வேலைக்கு செல்லுமாறு வலியுறுத்தினாலும் ஆமீர் கான் தனக்கு மிகவும் பிடித்த நடிப்புத் தொழிலையே தேர்வு செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

என்ஜினியர்

என்ஜினியர்

என்னால் படித்து டாக்டர், என்ஜினியராகி வேலைக்கு செல்ல முடியாது என தெரியும். என் வீட்டின் எதிர்ப்பையும் மீறி நான் யாருக்கும் தெரியாமல் புனேவில் உள்ள திரைப்படம் மற்றும் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் ரகசியமாக படித்தேன் என்கிறார் ஆமீர்.

English summary
Mr. Perfectionist of Bollywood said that his parents wanted him to be an engineer or doctor in order to get a stable income.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil