»   »  வாழ்க்கையில் 'அரை சதம்' அடித்த ஆமீர் கான்

வாழ்க்கையில் 'அரை சதம்' அடித்த ஆமீர் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார்.

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். கொடுத்த கதாபாத்திரத்தை நச்சென்று நடித்துக் கொடுப்பதற்கு பெயர் போனவர். விருதுகளை

விரும்பாதவர் என்று பெயர் எடுத்தவர் ஆமீர் கான்.

இந்நிலையில் அவர் பற்றி பாலிவுட் நட்சத்திரங்கள் என்ன சொல்கிறார்கள்?

ப்ரீத்தி ஜிந்தா

ப்ரீத்தி ஜிந்தா

ஆமீர் அர்ப்பணிப்புடன் வேலை செய்வார். அவர் பழக மிகவும் இனிமையானவர். தில் சாத்தா ஹை படத்தில் அவருடன் வேலை செய்தது ஜாலியாக இருந்தது என்கிறார் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.

அமீஷா பட்டேல்

அமீஷா பட்டேல்

மங்கல் பாண்டே படத்தில் ஆமீருடன் நான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். லகான் பட ஆடிஷனில் தான் ஆமீரை முதன்முதலாக சந்தித்தேன். அப்போது அவர் ஒரு சூப்பர் ஸ்டார். நான் ஒரு சாதாரண பெண். இருப்பினும் அவர் என்னை மிகவும் மரியாதையுடன் நடத்தினார். அவருக்கு 50 வயதாகிவிட்டதா? என்னைப் பொறுத்த வரை அவர் எப்பொழுதுமே 22 வயது நபர் தான் என்கிறார் நடிகை அமீஷா பட்டேல்.

ஊர்மிளா மடோன்கர்

ஊர்மிளா மடோன்கர்

ரங்கீலா படத்தில் ஆமீருடன் சேர்ந்து பணியாற்றியது இனிமையான அனுபவம். ஒரு காட்சியை எப்படி பலவிதமாக கொண்டு வரலாம் என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன் - இது ஊர்மிளா.

அஷுதோஷ் கோவாரிகர்

அஷுதோஷ் கோவாரிகர்

எனக்கு தெரிந்த ஆமீர் கான் ஒரு புதிர் என அவரை வைத்து லகான் படத்தை இயக்கிய அஷுதோஷ் கோவாரிகர் தெரிவித்துள்ளார்.

விஜய் கிருஷ்ண ஆச்சார்யா

விஜய் கிருஷ்ண ஆச்சார்யா

எனக்கு தெரிந்த ஆமீர் கான் சாதாரணமானவர், சேட்டைக்காரர் என்று அவரை வைத்து தூம் 3 படத்தை எடுத்த இயக்குனர் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா கூறியுள்ளார்.

English summary
Bollywood Perfectionist Aamir Khan has turned 50 today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil