»   »  ஆண்டவன் கட்டளை... பட ரிலீஸுக்கு முன்பே தயாரிப்பாளர் ஹேப்பி.. விஜய் சேதுபதிக்கு தங்கப் பரிசு!

ஆண்டவன் கட்டளை... பட ரிலீஸுக்கு முன்பே தயாரிப்பாளர் ஹேப்பி.. விஜய் சேதுபதிக்கு தங்கப் பரிசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்பெல்லாம் மறைந்த நடிகர் ரவிச்சந்திரனை வெள்ளிக்கிழமை நாயகன் என்பார்கள். காரணம், வாரந்தோறும் அவர் நடித்த ஒரு படம் ரிலீசாகும்.

இன்று கிட்டத்தட்ட அதே ரேஞ்சில் நிற்கிறார் விஜய் சேதுபதி. வாரத்துக்கு ஒன்று என்றில்லாவிட்டாலும், மாதம் ஒன்று!

தர்மதுரை வெளியாகி ஒரு மாதத்துக்குள் ஆண்டவன் கட்டளை வெளியாகிவிட்டது. அடுத்த மாதம் றெக்க வெளியாகிறது.

Aandavan Kattalai producer's gift to Vijay Sethupathy

ஆண்டவன் கட்டளை படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல பைனான்சியர் அன்புச்செழியன் தயாரித்துள்ளார்.

இப்படம் வெளிவருவதற்கு முன்பே தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் இப்படத்தை ஒருமுறை முழுவதும் பார்த்துள்ளனர். படத்தின் வியாபாரமும் ஏக திருப்தி.

Aandavan Kattalai producer's gift to Vijay Sethupathy

இதில் ஏகத்துக்கும் ஹேப்பியாகிவிட்ட தயாரிப்பாளர், விஜய் சேதுபதிக்கு உடனடியாக தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

அதோடு, இப்படத்தை இயக்கிய மணிகண்டனுக்கும் தங்க செயின் பரிசளித்தாராம்.

English summary
Anbu Chezhiyan, producer of Vijay Sethupathy's Aandavan Kattalai has been gave a gold chain gifty to the actor for his performance.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil