»   »  ஜாதகப்படி அஜீத் அரசியலுக்கு வருவார்: பிரபல இயக்குனர்

ஜாதகப்படி அஜீத் அரசியலுக்கு வருவார்: பிரபல இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் ஜாதகப்படி அவர் அரசியலுக்கு வருவார் என்று இயக்குனரும், நடிகருமான ராஜ் கபூர் தெரிவித்துள்ளார்.

அஜீத்தை வைத்து அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே ஆகிய படங்களை இயக்கியவர் ராஜ் கபூர். ராஜ் கபூர் பல படங்களில் நடித்துள்ளார். அவர் அஜீத் பற்றி பேசும்போது,

According to horoscope, Ajith'll enter politics: Director

அஜீத்தை பி மற்றும் சி சென்டருக்கு அழைத்துச் சென்றவன் நான். அஜீத் அரசியலுக்கு வந்து மக்கள் சேவை செய்வார் என்று அவர் ஜாதகத்தில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அஜீத் ரசிகர்கள் மன்றங்களே வேண்டாம் என்று கலைத்துவிட்டு ஒதுங்கியுள்ளார். சினிமா விழாக்கள், விருது வழங்கும் விழாக்கள் என்று அஜீத்தை எங்குமே பார்க்க முடியாது.

அவரை படத்தில் மட்டும் தான் பார்க்க முடிகிறது. இந்நிலையில் அவரைப் பற்றி ராஜ் கபூர் இப்படி கூறியுள்ளார்.

English summary
Director cum actor Raj Kapoor said that according to horoscope, Ajith will enter politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil