»   »  கிரிக்கெட் விளையாடுவதை விட நடிப்பது ரொம்ப கஷ்டம்! - 'சச்சின்' பட ஹீரோ சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் விளையாடுவதை விட நடிப்பது ரொம்ப கஷ்டம்! - 'சச்சின்' பட ஹீரோ சச்சின் டெண்டுல்கர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

யெஸ்... சச்சின் டெண்டுல்கர் சினிமா ஹீரோவாகிவிட்டார். அதுவும் அவரது சொந்த வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும் அவரை வைத்து சினிமா எடுக்க பலரும் முயற்சி மேற்கொண்டனர். கடைசியில் அவர் தனது வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டார். படத்தின் தலைப்பு 'சச்சின்'.

Acting in movie is tougher than playing cricket, says Sachin

இந்தப் படத்தை ஜேம்ஸ் எர்ச்கின் இயக்குகிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

சச்சினின் இளமைப் பருவ வீடியோக்களையே இதில் பயன்படுத்தப் போகிறார்களாம். அவர் விளையாடிய சர்வதேசப் போட்டிகளின் க்ளிப்பிங்குகளையும் பயன்படுத்தவிருக்கிறார்கள். இந்த தகவல்கள் சச்சினின் கோடிக்கணக்கான ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் நடிப்பது குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், "எனது வாழ்க்கை வரலாறு படத்தில் நான் நடிப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாடுவதை விட நடிப்பது கடினமானது என்பதைப் புரிந்து கொண்டேன்," என்றார்.

சமீபத்தில்தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் வாழ்க்கை வரலாறு படம் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்றது. அடுத்து டெண்டுல்கர் படம். இது வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது.

English summary
Sachin Tendulkar says that acting in movie is tougher than playing cricket.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil