»   »  விஷாலின் 'காமெடி'!

விஷாலின் 'காமெடி'!

Subscribe to Oneindia Tamil


மலைக்கோட்டை படத்தில் படம் முழுக்க காமெடியில் கலக்கியிருக்கிறாராம் விஷால்.


இதுவரை முறுக்கேறிய ஆக்ஷன் காட்சிகளிலும், அதிரடி நாயகனாகவும் மட்டுமே அறியப்பட்டு வந்த விஷால் மலைக்கோட்டை படத்தில் முதன் முதலாக காமெடியிலும் பின்னி எடுத்திருக்கிறார்.

பூபதி பாண்டியன்தான் இந்த மலைக்கோட்டையை செதுக்கி வருகிறார். தனுஷுக்கு தேவதையக் கண்டேன் மூலம் பிரேக் கொடுத்தவர் பூபதி பாண்டியன்.

மலைக்கோட்டையில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் ப்ரியா மணி. இவர் படம் முழுக்க கிளாமரில் அதகளம் பண்ணியுள்ளாரார்.

மலைக்கோட்டை குறித்து விஷால் கூறுகையில், இப்படத்தில் காமெடியும் இருக்கிறது, ஆக்ஷனும் இருக்கிறது. இரண்டையும் சரி விகிதமாக கலந்து கொடுத்திருக்கிறார் பூபதி பாண்டியன். அவரது படத்தில் காமெடி சிறப்பாக இருக்கும். இப்படத்திலும் அது இருக்கிறது.

அதேபோல எனது முந்தையை படங்களை விட இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் கூடுதலாக இருக்கும். இப்படத்தில் நடித்து முடித்த பிறகும் கூட அந்த பாதிப்பிலிருந்து இன்னும் நான் மீளவில்லை.

படத்திற்காக நான் உருவாக்கிக் கொண்ட பாடி லாங்குவேஜ் என்னை விட்டு விலகாமல் உள்ளது. அந்த அளவுக்கு ஈடுபாட்டோடு நடித்தேன்.

தாமிரபரணிக்குப் பிறகு இப்படத்தில் நான் திருப்திகரமாக நடித்துள்ளேன். இந்தப் படத்தில் நிஜமான விஷாலை பார்க்கலாம். 21ம் தேதி படம் வருகிறது என்றார் விஷால்.

விஷாலின் காமெடி பிளஸ் ஆக்ஷன் மற்றும் ப்ரியா மணியின் மிதமிஞ்சிய கிளாமர் படத்துக்கு புத்துயிர் கொடுத்துள்ளதாம். அவர் இவ்வளவு கவர்ச்சி காட்டி நடித்திருப்பது தமிழில் இதுவே முதல் முறையாகும்.

மலைக்கோட்டை 'காமக்'கோட்டையாக இல்லாமல் இருந்தால் சரி!

Read more about: malaikottai, priyamani, vishal
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil