விஜய்க்கு அரசியல் செட் ஆகாதுனு அவரிடம் அப்போவே சொன்னேன்.. போட்டுடைத்த நடிகர்.. இப்படியும் நடந்ததா?

சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவருமான விஜய் நேற்று கரூர், நாமக்கல் ஆகிய பகுதிகளில் தொண்டர்களை சந்தித்து பேசினார். அப்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 39 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த விஷயம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் விஜய்க்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகிறார்கள்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய்; வெளியே வந்து மக்களை சந்திக்கவே மறுக்கிறார், அவர் அரசியலுக்கு அன்ஃபிட் என்றெல்லாம் பலரும் விமர்சித்தார்கள். இதனையடுத்து அவர், உங்க விஜய் நா வரேன் என்கிற பெயரில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார். இந்தத் திட்டத்தின்படி வாராவாரம் சனிக்கிழமை மட்டும் தொண்டர்களை அவர் சந்திப்பது என ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுவும் ட்ரோலுக்கு உள்ளானது.

தொடங்கிய பயணம்: இருப்பினும் அதனையெல்லாம் கண்டுகொள்ளாத விஜய் திருச்சியிலிருந்து தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க நேற்று கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தவெக தொண்டர்களை சந்தித்தார். காலை 8.45 மணிக்கே அவர் தொண்டர்களிடம் பேசியிருக்க வேண்டும். ஆனால் அவரோ அந்த நேரத்தில்தான் சென்னையிலிருந்தே கிளம்பினார். இதனால் மணிக்கணக்கில் தொண்டர்களும், ரசிகர்களும் காத்து கிடந்தார்கள்.

Actor Aaru Bala has said that politics will not set to Vijay
Photo Credit:

ஏற்பட்ட மரணம்: ரொம்பவே தாமதமாக வந்த விஜய் வழக்கம்போல் ஆளுங்கட்சியான திமுகவையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்து பேசிவிட்டு சென்றார். ஆனால் அவர் கரூரில் பேசியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மொத்தம் 39 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் கரூருக்கு சென்றார். விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார்.

ஆறு பாலாவின் பதிவு: இந்நிலையில் நடிகர் ஆறு பாலா தனது முகநூல் பக்கத்தில், "சர்கார் படம் சூட்டிங்லே என் படத்தை எந்த தியேட்டர்ல பார்ப்பீங்கனு கேட்டாரு ..உதயம் தியேட்டர்ல பார்ப்பேன் சார் சொன்னே.. லேசாக சிரித்து விட்டு. நான் அரசியலுக்கு செட்டாவேனா கேட்டாரு.. நான் சிரித்த படி நீங்கள் அரசியலுக்கு செட்டாக மாட்டீங்க சார் சொன்னே ஒரு நொடி என் முகத்தை உண்ணிப்பாக கவனித்து விட்டு ஏன் அப்படி சொல்றீங்க கேட்டாரு.

அதெல்லாம் இல்லை: உங்க மேல கொலை கேஸ் இல்லை. உங்க மேல கற்பழிப்பு வழக்கு இல்லை.. உங்ககிட்ட சாராய பேக்டரி இல்லை.. உங்க மேல கட்ட பஞ்சாயத்து கேஸ் இல்லை .. கோடி கணக்கில் கொள்ளை அடிக்கிற மெடிக்கல் காலேஜ் இல்லை.. உங்ககிட்ட ரவுடிசம் பண்ண ஆள் இல்லை இது எதுவுமே உங்ககிட்ட இல்லை அதனால் நீங்க அரசியலுக்கு செட் ஆக மாட்டீங்க சார் சொன்னேன்.. லேசாக சிரித்து விட்டு மக்களுக்கு நல்லது செய்ய இதெல்லாம் தேவை இல்லையே நண்பா என்றார்.. ரொம்ப சென்சிட்டிவ் ஆன மனிதன்.. இப்படி ஒரு நிகழ்வு அவர் மனதை மீளா துயரத்திற்கு கொண்டு சென்று இருக்கும்.. உயிர் இழந்த ஆன்மாக்களுக்கு இரங்கல்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X