பாலியல் மெசேஜ் அனுப்பிய அஜ்மல்?.. ஆதாரம் வெளியிட்ட நடிகை.. கமெண்ட்ஸ் செக்ஷன் அதிருது.. பல பெண்கள் புகார்
சென்னை: நடிகர் அஜ்மல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர். தமிழில் கடைசியாக அவர் விஜய் நடித்த GOAT திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. சூழல் இப்படி இருக்க அவர் தனது பாலியல் தொல்லை தரும்படியான மெசேஜ்களை அனுப்பியதாக நடிகை ரோஷ்னா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் இன்னும் பல பெண்கள் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள்.
உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்த அஜ்மலுக்கு நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் சினிமாவுக்கு வந்தார். கடந்த 2005ஆம் ஆண்டு தமிழில் வெளியான பிப்ரவரி 14 திரைப்படம்தான் அவருக்கு முதல் படம். அந்தப் படத்துக்கு பிறகு மலையாளத்துக்கும் சென்ற அவர் பிரணயகாலம் படத்தில் நடித்து அங்கும் அறிமுகமானார். தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலுமே அவருக்கான வரவேற்பு சொல்லிக்கொள்ளும்படிதான் இருந்தது.

அடுத்தடுத்து வாய்ப்புகள்: பிப்ரவரி 14 படத்துக்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் அஜ்மல் நடித்த அஞ்சாதே திரைப்படம் அவருக்கு பெயரையும், விருதையும் பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தமிழிலும், மலையாளத்திலும் சரியாக பயன்படுத்திக்கொண்ட அவருக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இப்படி ஒரே நேரத்தில் மூன்று மொழிகளிலும் பிஸியானாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
கோ அஜ்மல்: அப்படிப்பட்ட நிலைமையில்தான் கே.வி.ஆனந்த் இயக்கிய கோ திரைப்படத்தில் முக்கியமான ரோலை ஏற்றார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அஜ்மலின் ரோலும் நெகட்டிவ் ஷேடில் இருந்தது. அந்த ரோலில் அட்டகாசமாக நடித்தார். அப்படம்தான் அஜ்மலின் கரியரில் அஞ்சாதேவுக்கு பிறகு சொல்லிக்கொள்ளும்படி அமைந்தது. அதனையடுத்து அவருக்கு வாய்ப்புகள் வந்தாலும் பெரிய அளவில் திருப்புமுனை கிடைக்கவில்லை.
நடிகையின் புகார்: கடைசியாக அவர் விஜய் நடித்த கோட் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார். இந்நிலையில் அவர் மீது நடிகை ரோஷ்னா ராய் என்பவர், தனக்கு அஜ்மல் பாலியல் ரீதியாக மெசேஜ் அனுப்புகிறார் என்று குற்றஞ்சாட்டியிருந்தார். அதுதொடர்பான ஆடியோவும் வெளியானது. உடனடியாக அதற்கு விளக்கமளித்த அஜ்மல், "எனது பெயரி களங்கப்படுத்தும் விதமாக இதுபோன்ற ஆடியோக்களை வெளியிட்டவர்கள்; இந்த அக்கறையை சமூகத்தின் மீது காட்டினால் நன்றாக இருக்கும். கட்டுக்கதைகள், ஏஐ, குரல் மாற்றம், அற்புதமான எடிட்டிங் மூலம் எனது திரை பயணத்தை தடுக்க முடியாது" என்று குறிப்பிட்டிருந்தார்.
கொட்டிய புகார்கள்: அஜ்மலின் விளக்கம் இப்படியிருக்கு நிலையில் ரோஷ்னா ராய் சில ஸ்க்ரீன் ஷாட்டுகளை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். அதில் அஜ்மல் ரோஷ்னாவுக்கு தொடர்ந்து விடாமல் மெசேஜ் செய்தது இடம்பெற்றிருந்தது. அந்தப் புகைப்படங்களை பகிர்ந்த ரோஷ்னா, "எனது இன்பாக்ஸை பாருங்கள். இதுதான் அவர் அனுப்பிய ஏஐ மெசேஜ்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். அந்தப் போஸ்ட்டுக்கு கீழே இருக்கும் கமெண்ட்ஸ் செக்ஷனில் இன்னும் ஏராளமான பெண்கள் வந்து, 'அஜ்மல் தங்களுக்கும் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியிருக்கிறார்" என்று புகார்களை கொட்டியிருக்கிறார்கள். இதனால் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











