சத்தமே இல்லாமல் பல கோடியை சேர்த்த ராகவா லாரன்ஸ்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னை: நடன இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருக்கும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

குரூப் டான்சராக தனது பயணத்தை தொடங்கிய ராகவா லாரன்ஸ், டி.ராஜேந்திரன் இயக்கிய சம்சார சங்கீதம் என்கிற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதன் பின், ஜென்டில்மேன், முட்டா மேஸ்திரி, ரக்ஷனா, அல்லரி பிரியுடு ஆகிய படங்களில் டான்சராக நடனமாடினார். அப்போது தான், 1999 ஆம் ஆண்டு ஸ்பீடு டான்ஸர் என்கிற தெலுங்கு படம் மூலம் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாமல் தோல்வியடைந்தது. அதன் பிறகு அவர் அஜித் நடித்த உன்னை கொடு என்னை தருவேன், பிரசாந்த் நடித்த பார்த்தேன் ரசித்தேன் போன்ற திரைப்படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார்.

Raghava Lawrence Net worth
Photo Credit:

காஞ்சனா 4 : தொடர்ந்து சின்ன ரோலில் நடித்து வந்த ராகவா லாரன்சுக்கு முனி திரைப்படம் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. பேய்க்கு பயந்தவராகவும், அதே நேரம் பேய் பிடித்தவராகவும் நடித்து அசத்தி இருந்தார் லாரன்ஸ், அந்த படம் வசூலை அள்ளியது. அந்த படத்தை தொடர்ந்து, காஞ்சா படத்தை எடுத்தார். இது வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்களை 15 முதல் 20 கோடி பட்ஜட்டில் இயக்கி 100 கோடிக்கு மேல் லாபம் பார்த்தார். தற்போது காஞ்சனா 4 படத்தை நடிப்பதோடு இயக்கியும் வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது. இது மட்டுமில்லாமல், பென்ஸ், ஹண்டர், புல்லட் உள்ளிட்ட இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார்.

சொத்து மதிப்பு: ஒரு படங்களுக்கு 15 முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்கும் ராகவா லாரன்ஸ் அதில் பெரும் தொகையை தான் நடத்தி வரும் ஆதரவற்ற மாணவர்கள் இல்லத்திற்கு வழங்குகிறார். மேலும், நடனத்தில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு இலவச நடன வகுப்புகளையும் நடத்தி வரும், அண்மையில் தான் சம்பாதித்து முதலில் வாங்கிய வீட்டை சில மாற்றங்கள் செய்து பள்ளிக்கூடமாக மாற்றி அதில் இலவச கல்வி கொடுத்து வருகிறார்.

இன்று பிறந்த நாள்: இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடி வரும் ராகவா லாரன்சுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பலரும் ராகவாவிற்கு இணையத்தின் வழியாக பிறந்த நாள் வாழ்த்து கூறி வரும் நிலையில் ராகவா லாரன்சின சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு சொந்தமாக சென்னையில் வீடு, ராகவேந்திரா கோயில் போன்றவை உள்ளது. அதே போல் இவரின் வீட்டில் 4 கார்கள் உள்ளது. வருடத்திற்கு 30 முதல் 40 கோடி வரை சம்பாதிக்கும் இவருக்கு 80 கோடி முதல் ரூ100 கோடி வரை சொத்து இருக்கும் என சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் இவர் கடுமையாக உழைத்து சம்பாதித்த சொத்தாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X