நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா பாதிப்பு... கவலையில் ரசிகர்கள்

சென்னை : நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய், முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார். ஆரம்பத்தில் சாக்லேட் பாய் ரோல்களில் நடித்து வந்த அருண் விஜய், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

அடையாளம் காட்டிய அஜித் படம்

அடையாளம் காட்டிய அஜித் படம்

இவர் நடித்த சில படங்கள் வெற்றி அடைந்தாலும், பல படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை இவருக்கு தரவில்லை. 2015 ல் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லன் ரோலில் அறிமுகமானார் அருண் விஜய். இந்த படத்தில் அருண் விஜய்யின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னட மொழிகளிலும் வில்லன் ரோல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

 மீண்டும் ஹீரோ

மீண்டும் ஹீரோ

வில்லன் ரோலால் பேசப்பட்ட அருண் விஜய் மீண்டும் குற்றம் 23 படத்தில் ஹீரோவானார். இந்த படமும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்ததால் அதற்கு பிறகு அருண் விஜய் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. பேசப்படும் நடிகரானார் அருண் விஜய். இதனால் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புக்கள் இவருக்கு கிடைத்தன.

சாதனை படைத்த யானை

சாதனை படைத்த யானை

தற்போது பார்டர், ஓ மை டாக், அக்னி சிறகுகள், பாக்சர், சினம், யானை ஆகிய படங்களுடன் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதில் லேட்டஸ்டாக டைரக்டர் ஹரி இயக்கத்தில் இவர் நடித்து முடித்துள்ள யானை படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த டீசர் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

நடிப்பில் பிஸியாக இருக்கும் அருண் விஜய், இன்று ட்வீட் செய்துள்ளார். அதில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், வீட்டுத் தனிமையில் இருப்பதாகவும், டாக்டரின் ஆலோசனையின் பேரில் வீட்டில் இருந்தே சிகிச்சைகள் எடுத்து வருவதாகவும், அனைவரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Recommended Video

Abhiyum Naanum | Ramya Gowda Exclusive | Thalapathy Vijay னா உசுரு | Filmibeat Tamil
ரசிகர்கள் பிரார்த்தனை

ரசிகர்கள் பிரார்த்தனை

இதனால் அருண் விஜய் விரைவில் குணமடைய ரசிகர்கள், நண்பர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்தும், பிரார்த்தனையும் தெரிவித்து வருகிறார்கள். திரைபிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X