Don't Miss!
- News
எட்டப்பன் வேலை பார்க்கிறார்கள்.. ஈரோடு இடைத்தேர்தலில் பாடம் புகட்டுவோம்.. எடப்பாடி பழனிசாமி பேச்சு!
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Lifestyle
சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய்.. ஹார்டுவொர்க்கர்.. ஆர்யா நடிப்பில் வெளியான அசத்தல் படங்கள்! #HBDArya
சென்னை: நடிகர் ஆர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய படங்கள் குறித்து ஓர் பார்வை...
கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகர் ஆர்யா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை கொடுத்து ஹிட் நடிகராக வலம் வருகிறார்.
இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது கதாப்பாத்திரத்திற்காக எப்படிப்பட்ட ரிஸ்க்கையும் எடுப்பவர் ஆர்யா. சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் தடம் பதித்துள்ளார் நடிகர் ஆர்யா.
யசோதா
படத்தில்
நடிகை
சமந்தாவுடன்
ஜோடி
போடும்
நடிகர்
யார்
தெரியுமா?
தீயாய்
பரவும்
தகவல்!

ஆர்யா பிறந்த நாள்
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்றார். நடிகர் ஆர்யா தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்த நடிகை சாயிஷாவை கடந்த 2019ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகர் ஆர்யா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவரது நடிப்பில் வெளியாகி உற்றுநோக்கப்பட்ட படங்கள் குறித்து ஓர் பார்வை....

அறிந்தும் அறியாமலும்
நடிகர் ஆர்யா தமிழில் 2005ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு மகனாக இளம் கேங்ஸ்டராக நடித்திருந்தார் ஆர்யா. அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களை குவித்தார் ஆர்யா. இதன்மூலம் முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார் ஆர்யா.

நான் கடவுள்
அடுத்ததாக பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள் படம் ஆர்யாவின் கேரியரில் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. 2009ஆம் ஆண்டு வெளியான நான் கடவுள் படத்தில் லீடிங் ரோலில் நடித்தார் ஆர்யா. இந்தப் படத்தில் அகோரி கேரக்டரில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை குவித்தார். இந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம் ஃபேர் விருதை பெற்றார் ஆர்யா.

மதராசப்பட்டினம்
அதன்பிறகு ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் படத்தில் நடித்தார். 2010ஆம் ஆண்டு வெளியான இந்த படம் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் தருவாயில் சலவை தொழிலாளிக்கும் ஆங்கிலேயே கவர்னரின் மகளுக்கும் இடையே மலரும் காதலை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. இதில் சலவை தொழிலாளியாக நடித்திருந்தார் ஆர்யா. இந்தப் படமும் அவரது கேரியரில் முக்கிய படமாக பார்க்கப்படுகிறது.

பாஸ் என்கிற பாஸ்கரன்
அதே ஆண்டில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படமும் ஆர்யாவுக்கு தொடர் வெற்றியை கொடுத்த ஒரு படமாக அமைந்தது. ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் ஆர்யா கூட்டணியில் முழுக்க முழுக்க காதல் நகைச்சுவை படமாக அமைந்தது பாஸ் என்கிற பாஸ்கரன். இந்தப் படத்தின் மூலம் நகைச்சுவை ஜானரிலும் தனது தடத்தை பதித்தார் ஆர்யா.

அவன் இவன்...
அடுத்ததாக அவன் இவன் திரைப்படம். இந்தப் படத்தின் மூலம் மீண்டும் பாலாவுடன் கூட்டணி அமைத்து தன்னால் எபேர்ப்பட்ட கதாப்பாத்திரத்தையும் செய்ய முடியும் என நிரூபித்தார் ஆர்யா. இந்தப் படத்தில் ஒரு தந்தை இரு தாய்களுக்கு மகன்களாக விஷால் மற்றும் ஆர்யா நடித்திருந்தனர். கும்புடுறேன் சாமி என்ற கதாப்பாத்திரத்தில் ஆர்யாவும் வணங்கா முடி என்ற கதாப்பாத்திரத்தில் விஷாலும் நடித்திருந்தனர். பழிவாங்கும் ஆக்ரோஷமான கதைக்களம் கொண்ட இந்தப் படமும் ஆர்யாவின் நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்தது.

இரண்டாம் உலகம்...
அடுத்து
2013ஆம்
ஆண்டு
செல்வராகவன்
இயக்கத்தில்
வெளியான
இரண்டாம்
உலகம்
திரைப்படம்.
இந்தப்
படத்தில்
இரட்டை
வேடத்தில்
நடித்தார்
ஆர்யா.
இரண்டு
உலகங்களில்
நடக்கும்
கதையை
மைய்யப்படுத்திய
இப்படத்தில்,
ஆர்யாவுக்கு
ஜோடியாக
அனுஷ்கா
நடித்தார்.
இதில்
ஆர்யா
மது
பாலகிருஷ்ணன்,
மருவன்
என்ற
எதிரெதிரான
இரண்டு
கதாப்பாத்திரங்களில்
நடித்திருந்தார்.

கஜினிகாந்த்
அடுத்தப்படியாக ஆர்யா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியாகி செம ஹிட்டான படங்களில் ஒன்று கஜினிகாந்த் திரைப்படம். பலே பலை மகடிவாய் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் நடிகை சாயிஷா ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் என்ற கதாப்பாத்திரத்தில் மறதி அதிகம் கொண்ட நபராக நடித்திருந்தார் ஆர்யா.

சார்பட்டா பரம்பரை
அடுத்ததாக ஆர்யா நடிப்பில் வெளியாக சக்கை போடு போட்ட படம் சார்பட்டா பரம்பரை. சமீபத்தில் அமேஸான் பிரைம்மில் வெளியான இப்படம், வட சென்னையில் 1960களில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டையை மைய்யப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் கடுமையாக வொர்க் அவுட் செய்த மிரட்டியிருந்தார் ஆர்யா. இப்படமும் விமர்சன ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படமும் ஆர்யாவின் கேரியரில் ஒரு முக்கிய படமாக கருதப்படுகிறது..

பிறந்தநாள் வாழ்த்துகள் ஆர்யா!
தொடர்ந்து பல படங்களில் பிஸியாக உள்ள ஆர்யா தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதேபோல் கேப்டன் என்ற படத்திலும் நடித்து வருகிறார் ஆர்யா. மேலும் வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் ஆர்யா. நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் வலம் வரும் நடிகர் ஆர்யா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தொடர்ந்து தனித்துவமான பொழுது போக்கு திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் பணி தொடரட்டும்... பிறந்தநாள் வாழ்த்துகள் ஆர்யா!