Don't Miss!
- News
"தமிழகத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி?" எங்கு தெரியுமா! ஓபனாக பேசிய அண்ணாமலை! அதிமுக குறித்தும் பரபர
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
உங்கள் அன்புக்கு நான் தகுதியானவனா?... திடீரென இன்ஸ்டா லைவில் வந்த அஸ்வின் !
சென்னை : விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகர் அஷ்வின், நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
எப்போதும் சிரித்துக்கொண்டு க்யூட்டாக வரும் அஸ்வினை இன்ஸ்டாகிராமில் சுமார் 3 மில்லியன் பாலோவர்ஸ் பின் தொடர்ந்து வருகிறார்கள் .
அஸ்வினை அதிகமாக பின்தொடர்பவர்கள் பெண் ரசிகைகள் தான். இப்படி பெண்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த அஸ்வின், தனது பிறந்த நாளில் ரசிகைகளுக்கு ஷாக்கொடுக்கும் வகையில் இன்ஸ்டா நேரலையில் பேசினார்.
சிறந்த பிறந்த நாள் பரிசு… சாய்பல்லவி புது பட அப்டேட்

என்ன சொல்ல போகிறாய்
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் தலைகாட்டி சென்ற அஸ்வின் அந்த நிகழ்ச்சிக்கு பிறகுதான் பெண்களின் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஹீரோ அஸ்வினும், காமெடியன் புகழும் இணைந்து 'என்ன சொல்ல போகிறாய்' படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இந்த படத்தினை இயக்கியுள்ளார். அதில் அவந்திகா மிஸ்ரா,தேஜு அஷ்வினி இருவரும் படத்தின் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இன்ஸ்டா லைவ்
அஸ்வின் நேற்று தனது 31வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு ரசிகர்கள் காமன் டிபி, வாழ்த்து தெரிவிப்பது, வீடியோ என தங்களது அன்பை வெளிப்படுத்தி வந்தனர். ரசிகர்களின் இந்த அன்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அஷ்வின் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் வந்து ரசிகர்களிடம் பேசினார்.

அன்புக்கு நன்றி
அதில், உங்கள் அனைவரது அன்புக்கும் நன்றி. நான் எந்தவொரு சின்ன விஷயம் செய்தாலும் அதைக் கொண்டாடும் உங்களுக்கு நன்றியைத்தவிர வேறுவார்த்தையை என்னால் யோசிக்க கூட முடிவதில்லை. பல சமயங்களில் இந்த அன்புக்கு நான் தகுதியானவனா என்பதை யோசித்திருக்கிறேன். உங்கள் ஒவ்வொருவருடைய நேரமும் முக்கியமானது. அதை எனக்காக தருகிறீர்கள் எனும்போது அதை நிச்சயம் எனதாக்கி கொள்வேன்.
Recommended Video

அனைவருக்கும் நன்றி
நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உங்களைக் கருத்தில் கொண்டே எடுக்கிறேன், பேசுகிறேன். முதலில் நான் ஒரு ஆடியன்ஸ். உங்கள் அன்பினால் மட்டுமே நான் பிழைத்துக்கொண்டுடிருக்கிறேன். என்னைப் பிடித்தவர்களுக்கு நான் நன்றி. எல்லாருக்கும் என்னால் தனித்தனியாக நன்றி தெரிவிக்க முடியவில்லை. அதனால்தான் இந்த லைவ். அனைவருக்கும் நன்றி என அஷ்வின் பேசியுள்ளார்.