Don't Miss!
- News
சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டர் தண்ணீர் தொட்டியில் ஊழியர் மரணம்.. 7 நாட்களாக கிடந்த சடலம்
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Lifestyle
உங்கள் துணையை தினமும் ஸ்பெஷலானவராக உணர வைக்க இந்த சின்ன சின்ன விஷயங்கள் போதுமாம்...!
- Sports
ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? சூர்யகுமாரா? சுப்மன் கில்லா? தினேஷ் கார்த்திக்கின் பளிச் பதில்
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கபடி வீரராக நடிக்கும் அதர்வா... மீண்டும் ஹிட் இயக்குனருடன் இணைந்தார்!
சென்னை : நடிகர் அதர்வா தான் அடுத்து நடிக்கும் திரைப்படத்தில் கபடி வீரராக நடிக்க உள்ளார்.
Recommended Video
100 படத்திற்கு பிறகு தொடர்ந்து ஆக்ஷன் கதைகளில் நடித்து வரும் அதர்வா மீண்டும் சாம் ஆண்டன் உடன் இணைந்து புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
3
மாறுபட்ட
கேரக்டர்களில்
விஜய்...தளபதி
65
அடுத்த
அப்டேட்டும்
வெளியானது
கபடி விளையாட்டை மையப்படுத்தி சமீபகாலமாக தமிழில் பல படங்கள் வந்து கொண்டு இருக்க இப்பொழுது நடிகர் அதர்வாவும் கபடி வீரராக தேசிய விருது வென்ற இயக்குனரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

மீண்டும் சாம் ஆண்டன்
இளம் நடிகர்களில் அதிக அளவு ரசிகர் பட்டாளத்தை கொண்டு தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த ஒரு கிசுகிசுக்களிலும் சிக்காமல் அடுத்தடுத்த படங்களில் புது இயக்குனர்களுடன் இணைந்து வித்தியாசமான படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் நடிகர் அதர்வா 100 படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சாம் ஆண்டன் இயக்கத்தில் புதிய படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் ஆகி இருக்க அதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது.

பரமேஸ்வரன்
தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்று பெற்றெடுத்த நின்னுக்கோரி தமிழில் தள்ளிப்போகாதே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். கொடி படத்திற்கு பிறகு தமிழில் நடிக்காமல் இருந்த அனுபமா தள்ளிப்போகாதே படத்தில் நடித்திருக்க இவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜிகர்தண்டா தெலுங்கில் ரீமேக்
இதுவரை லவ்வர் பாயாக வலம் வந்த அதர்வா குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த என ஆக்ஷன் படங்களில் நடித்து தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வர தெலுங்கிலும் அறிமுகத்தை கொடுத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற ஜிகர்தண்டா தெலுங்கில் ரீமேக் செய்யப்பட அதில் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களுக்கும் அறிமுகமானார்.

சற்குணம் இயக்கத்தில்
வித்தியாசமான கதைகள் தேர்ந்தெடுத்து அதில் பணியாற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கும் அதர்வா சண்டிவீரன் படத்திற்கு பிறகு இப்பொழுது மீண்டும் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி இருக்க இதில் இவர் கபடி வீரராக நடிக்க நடிக்க உள்ளார். அதற்காக சிறப்பு பயிற்சியும் எடுத்து வருகிறார். கபடி விளையாட்டை கொண்ட கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு பொத்தேரி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கைவசம் இருக்கும் படங்களில் நடித்து முடித்துவிட்டு பொத்தேரி படத்தின் படப்பிடிப்பில் அதர்வா கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதர்வா குருதி ஆட்டம் படத்திலும் கபடி வீரராக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தளபதி 67 டீம்.. விமானத்தில் பறக்கும் வீடியோவே ரிலீஸ்.. ஏஜென்ட் டினா இருக்காங்க கவனிச்சீங்களா!
-
தளபதி 67 டைட்டில் இதுதானா? குருதியில் புள்ளி வைத்து விஜய்யின் உருவத்தை கோலம் போட்டது அதுக்குத்தானா?
-
ஓடிடியில் வெளியாகும் முன்னே லீக்கான துணிவு HD பிரின்ட்.. நெட்பிளிக்ஸில் எப்போ ரிலீஸ் தெரியுமா?