Just In
Don't Miss!
- News
சட்டசபைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ரூ.50000 வரை ரொக்கம் கொண்டு போகலாம் - புகாருக்கு 1950
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 27.02.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது…
- Automobiles
மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Sports
சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மழை வெள்ளத்தில் சூழ்ந்தது ரன் வே... 24 மணி நேரம் துபாய் ஏர்போட்டில் சிக்கிக்கொண்ட ஹீரோ
சென்னை: மழை வெள்ளம் காரணமாக, நடிகர் அதர்வா துபாய் விமான நிலையத்தில் 24 மணி நேரம் சிக்கிக்கொண்டார்.
நடிகர் அதர்வா, ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். இயக்குனர் ஆர்.கண்ணன், சந்தானம் நடிக்கும் படத்தையும் அதர்வா நடிக்கும் படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி வந்தார்.
இதில் சந்தானம் நடிக்கும் படத்தின் ஷூட்டிங், கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. இதையடுத்து அதர்வா நடிக்கும் படத்தைத் தொடங்கி இருக்கிறார் ஆர்.கண்ணன்.
இளையராஜா பயோபிக்... இயக்குனர் ஆகறது... இதெல்லாம் இல்லையாமே? நோ என்கிறார் யுவன் சங்கர் ராஜா

அனுபமா பரமேஸ்வரன்
இந்தப் படத்தில் அதர்வா ஜோடியாக, அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். அமிதாஸ் பிரதான், ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அசர்பைஜான்
இதன் ஷூட்டிங் ரஷ்யா அருகில் உள்ள அசர்பைஜான் நாட்டில் நடக்கிறது. இதற்காக படக்குழு அங்கு சென்றுள்ளது. இந்நிலையில், அங்கு செல்வதற்காக நடிகர் அதர்வா, கடந்த சனிக்கிழமை துபாய் சென்றார். அங்கிருந்து அவருக்கு அசர்பைஜானுக்கு கனெக்டிங் பிளைட் இருந்தது.

கனமழை
இந்நிலையில் துபாயில் பெய்த கனமழை காரணமாக, விமான நிலைய ரன் வே வெள்ளத்தில் தத்தளித்தது. விமானங்கள் தரையிறங்கவோ, செல்லவோ முடியவில்லை. வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

24 மணி நேரம்
இதனால் நடிகர் அதர்வா, சுமார் 24 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தார். ரன் வே தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, அவர் அசர்பைஜான் தலைநகர் பாகு-வுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

பிசியான ஏர்போர்ட்
உலகின் பிசியான விமான நிலையங்களில் 3வது இடத்தில் இருக்கிறது துபாய் ஏர்போர்ட். சரக்கு விமான போக்குவரத்தில் உலகின் ஆறாவது பிசி ஏர்போர்ட் இதுதான். 2017 ஆம் வருடக் கணக்குப்படி, 88 மில்லியன் பயணிகளை கையாண்டிருக்கிறது இந்த ஏர்போர்ட். வருடத்துக்கு 90 மில்லியன் பயணிகளை கையாள முடியுமாம். பல்வேறு நாடுகளில் இருந்து இங்கு வரும் டூரிஸ்ட்களுக்கு துபாய் ஏர்போர்ட் பல ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன் விவரங்கள் ஏர்போர்ட்டின் இந்த, https://www.dubaidxbairport.com/ வெப்சைட்டில் வெளியிடப்பட்டு இருக்கிறது.