நடிகைக்காக உடல் முழுவதும் பச்சை குத்திக்கொண்டு திரியும் பிரபல காமெடி நடிகர்!!!
சென்னை : நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ரியோ ராஜ் நடித்துள்ள பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம் விரைவில் வெளியாக தயாராகி உள்ளது.
வீட்டை விட்டு வெளியேறிய தங்கையை கடத்துவதை மையக் கருவாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.
முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியிருக்கும் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் பாலசரவணன் பிரபல நடிகைக்காக உடல் முழுவதும் பச்சை குத்திக் கொண்டு திரிகிறார்.

பிளான் பண்ணி பண்ணனும்
அதர்வா தமிழ் சினிமாவில் அறிமுகமான பானாகாத்தாடி என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பத்ரி
வெங்கடேஷ் இந்த படம் நல்ல வரவேற்பை பெற அதைத் தொடர்ந்து மீண்டும் அதர்வா நடிப்பில் உருவான செம போத ஆகாதே என்ற படத்தையும் இயக்கினார். இப்பொழுது மூன்றாவது படமாக பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

தங்கை வீட்டை விட்டு
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் ரியோ ராஜ் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் ஹீரோவாக நடித்து இருக்க முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக உருவாகி உள்ளது. காமெடி நடிகர் பாலசரவணன் இதில் காமெடியனாக நடித்திருக்கிறார். திடீரென அவரது தங்கை வீட்டை விட்டு வெளியேறுகிறார் மீண்டும் தங்கையை வீட்டுக்கு அழைத்து வர அவரை கடத்தும் நோக்கில் நண்பர்களுடன் இணைந்து பிளான் செய்வதே இந்த படத்தின் மையக் கருவாக உள்ளது.

நடிகைக்காக உடல் முழுவதும் பச்சை
நடிகை ரம்யா நம்பீசன் படத்தில் ஹீரோயினியாக நடித்திருக்க எம்எஸ் பாஸ்கர்,சந்தானபாரதி, ரோபோ சங்கர், தங்கதுரை,முனீஸ்காந்த், ஆடுகளம் நரேன் என பலர் இந்த படத்தில் நடித்திருக்க பிரபல நடிகை அனைகா சொடி முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். அனைகாவின் மேனேஜராக எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ளார். ரண களத்துக்கு மத்தியிலும் கிளுகிளுப்பு என்பது போல தங்கை காணாமல் போனதை தேடுவது ஒரு புறம் இருக்க பாலசரவணன் மற்றொரு புறம் நடிகை அனைகாவுக்காக உடல் முழுவதும் பச்சை குத்திக் கொண்டு திரிகிறார்.

அனைகா சிறப்புத் தோற்றத்தில்
மேலும் இந்த படத்தில் அனைகா சிறப்புத் தோற்றத்தில் வந்து செல்கிறார். இவ்வாறு முழுக்க முழுக்க வித்தியாசமாகவும் காமெடியாகவும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஹீரோயின் ரம்யா நம்பீசன் பாடல்கள் பாடியுள்ளார். குடும்பமாக கண்டுகளிக்க கூடிய இந்த காமெடி திரைப்படம் வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி திரையில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications