twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துயர் துடைக்க தயாரான திரையுலகினர்! கேரளாவுக்கு உதவும் நடிகர்கள்!

    திரையுலகினர் கேரளாவுக்கு நிதியுதவி செய்துள்ளனர்.

    |

    Recommended Video

    துயர் துடைக்க தயாரான திரையுலகினர்!...கேரளாவுக்கு உதவும் நடிகர்கள்!- வீடியோ

    சென்னை: கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரையுலகினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

    வரலாறு காணாத அளவுக்கு கேரளாவில் மழை பெய்துவருகிறது. இதுவரை மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

    14 மாவட்டங்களிலும் வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக கொச்சி விமான நிலையம் வரும் சனிக்கிழமை 2 மணிவரை மூடப்படுகிறது.

    ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தன்னார்வளர்கள், அரசு சாரா அமைப்பினர் மற்றும் பிரபலங்களும் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

    10 லட்சம்

    10 லட்சம்

    இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. வலக்கை கொடுப்பது இடக்கை அறியாது என்பதுபோல நிதியுதவி செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

    விஜய் தேவரகொண்டா

    விஜய் தேவரகொண்டா

    அதேபோல் அர்ஜுன் ரெட்டி திரைப்பட நடிகர் விஜய் தேவரகொண்டா ரூ. 5 லட்சம் அளித்துள்ளார். நடிகர் விஷால் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.

    25 லட்சம்

    25 லட்சம்

    பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் நடிகர் சூர்யா கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார்.

    பிக்பாஸ்

    பிக்பாஸ்

    நடிகர் கமல்ஹாசன் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். அதேபோல் அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி சார்பாக ரூ.25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    பிரகாஷ்ராஜ்

    பிரகாஷ்ராஜ்

    நடிகை ரோகினி உள்பட பலரும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போதும் திரையுலகினர் உதவிகள் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    70 people have died in Kerala flood. Torrential rain and overflowing rivers results are worse. Many celebrities came forward to help.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X