twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘தனுஷ்’லாம் ஒரு ஹீரோவா?..ஆர்பாட்டம் இல்லாத அசுர வளர்ச்சி..தனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல் ரவுண்டப்!

    |

    சென்னை : தனுஷ்'லாம் ஒரு ஹீரோவா? என விமர்சித்து வசைபாடியவர்களுக்கு ஆர்பாட்டம் இல்லாத அசுர வளர்ச்சி மூலம் பதிலடி கொடுத்துள்ளார் தனுஷ்.

    1983ம் ஆண்டு ஜூலை 28ந் தேதி இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கும் விஜயலட்சுமி தம்பதியினருக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார் தனுஷ்.

    இன்று தனது 39வது பிறந்த நாளை கொண்டாடி வரும் தனுஷிற்கு, திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் பலர் வாழ்த்து சொல்லிவரும் நிலையில் திரைத்துறையில் அவர் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

    வெற்றிகரமான 3 வது நாள், 5 வது நாள் என்று விளம்பரம்.. பாக்யராஜ் கிண்டல்! வெற்றிகரமான 3 வது நாள், 5 வது நாள் என்று விளம்பரம்.. பாக்யராஜ் கிண்டல்!

    துள்ளுவதோ இளமை

    துள்ளுவதோ இளமை

    2002ம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்தார். இந்தத் படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தார். தனுஷின் அண்ணனான செல்வராகவன் திரைக்கதையை எழுதியிருந்தார். இவர் நடித்த முதல் படமே ஓரு மார்கமான கதை அம்சத்தை கொண்ட படமாக இருந்தால், படம் பல விதமான விமர்சனங்களை சந்தித்தது.

    ஒட்டிய கன்னம், மெலித்த தேகம்

    ஒட்டிய கன்னம், மெலித்த தேகம்

    அதுமட்டும் இல்லாமல் இயக்குநரின் மகன் என்ற தகுதி மட்டும் இருந்தால் போதுமா? இதெல்லாம் ஒரு மூச்சியா? என பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன. பொதுவாக ஹீரோ என்றாலே வாட்டசாட்டமான உடல், வசீகரிக்கும் முகம் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் உள்ளது. ஆனால், தனுஷின் ஒட்டிய கன்னம், மெலித்த தேகம் தமிழ் சினிமாவில் கேலிக்குள்ளானது. இந்த விமர்சனங்களை படிகற்களாக்கி நடிப்பில் மிளிர்தார் தனுஷ்.

    திவ்யா.. திவ்யா...

    திவ்யா.. திவ்யா...

    அண்ணன் இயக்கத்தில் உருவான காதல் கொண்டேன் படத்தில் வேறுவிதமான தனுஷை பார்க்க முடிந்தது. அந்தப் படத்தில் வினோத் என்னும் கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை கொடுத்து விமர்சனம் செய்தவர்களின் வாயை அடைத்தார் தனுஷ். அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் திவ்யா.. திவ்யா... என வெறி பிடித்தவன் போல் இவர் பேசிய வசனம் இன்று வரை அனைவரையும் வியந்து பேச வைத்துள்ளது.

    கொக்கி குமார்

    கொக்கி குமார்

    அதே ஆண்டு வெளியான திருடா திருடி படத்தில் இவர் மன்மத ராசா..மன்மத ராசா பாடலுக்கு இவர் ஆடிய ஆட்டத்தால் ஒட்டுமொத்த திரையுலகிற்கும் நடிப்பு மட்டும் இல்லை ஆட்டமும் வரும் என்பதை நிரூபித்தார். அடுத்தாக செல்வராகவனின் புதுப்பேட்டை படத்தில் கொக்கி குமார் கதாபாத்திரத்தில் யாருயா இவன் என்னம்மா நடிக்கிறான் என அனைவரையும் உச்சுகொட்டி பேசவைத்தார்.

    மறக்க முடியாத படம்

    மறக்க முடியாத படம்

    தனுஷின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத திரைப்படம் என்றால் அது பொல்லாதவன் தான். இந்த படத்தில் இயல்பான நடுத்தர குடும்பத்து இளைஞனாக நடித்திருந்தார் தனுஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த முதல் படமான பொல்லாதவன் தனுஷ் கெரியரில் மறக்க முடியாத திரைப்படமாக அமைந்தது. இப்படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்.

    இரு தேசிய விருது

    இரு தேசிய விருது

    வெற்றிகரமான நாயகனாகத் தன்னை நிறுவிக்கொண்ட தனுஷ் யாரடி நீ மோகினி, படிக்காதவன், 3, ஆடுகளம், மாப்பிள்ளை, மயக்கம் என்ன, வேங்கை, வேலையில்லா பட்டதாரி, மாரி, வடசென்னை, தங்கமகன், அசுரன், கர்ணன் போன்ற திரைப்படங்களில் நடித்து அசத்தினார். ஆடுகளம்,அசுரன் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

    அசுர வளர்ச்சி

    அசுர வளர்ச்சி

    தேசிய விருது வென்ற நாயகன் தனது அசாத்தியமான நடிப்பால் ஹாலிவுட் வரை தனது திறமையை வெளிப்படுத்தி, ஆர்பாட்டமே இல்லாமல் அசுர வளர்ச்சி அமைந்துள்ளார் தனுஷ். விமர்சனங்களை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதை தனுஷ் நிரூபித்து தனது ரசிகர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளார். அந்த அசுர நாயகனுக்கு பிலிமிபீட் சார்பாக மீண்டும் ஒருமுறை பிறந்ததால் வாழ்த்து சொல்லிக்கொள்வோம். ஹேப்பி பர்த்டே தனுஷ் சார்.

    English summary
    Dhanush is celebrating his 39th birthday today. Actor Dhanush birthday special roundup
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X