மும்பையில் புது வீடுதான் போல.. மூன்றாவது முறையாக அந்த பாலிவுட் இயக்குநருடன் இணையும் தனுஷ்!

மும்பை: ராஞ்சனா, அட்ரங்கி ரே படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஒரு ஆக்‌ஷன் படத்திற்காக மீண்டும் இயக்குநர் ஆனந்த் எல் ராய் உடன் நடிகர் தனுஷ் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோலிவுட் நடிகராக இருந்து வந்த நடிகர் தனுஷ், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என தன்னை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இதுதான் நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிய காரணம் என்றும் கூறப்படுகிறது.

குவியும் பாலிவுட் வாய்ப்புகள்

குவியும் பாலிவுட் வாய்ப்புகள்

நடிகர் தனுஷ், அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் நடிப்பில் சமீபத்தில் ஒடிடி தளத்தில் வெளியான அட்ரங்கி ரே இந்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரு இந்தி படங்களில் நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூன்றாவது முறையாக

மூன்றாவது முறையாக

இதுவரை நடிகர் தனுஷ் ராஞ்சனா, ஷமிதாப் மற்றும் அட்ரங்கி ரே என 3 பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இதில், ராஞ்சனா மற்றும் அட்ரங்கி ரே படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கி உள்ளார். இந்நிலையில், நடிகர் தனுஷை வைத்து ஆக்‌ஷன் மற்றும் காதல் கலந்த ஒரு புதிய படத்தையும் ஆனந்த் எல் ராய் இயக்கப் போவதாக தற்போது கூறப்படுகிறது.

தனுஷ் என் தம்பி மாதிரி

தனுஷ் என் தம்பி மாதிரி

சமீபத்தில் இயக்குநர் ஆனந்த் எல் ராய் அளித்த பேட்டியில் தனுஷ் நடிகர் என்பதை தாண்டி என்னுடைய தம்பி போன்றவர் என பேசி உள்ளார். அவருக்கு இருக்கும் திறமை மிகப்பெரியது என்றும் பாலிவுட்டில் அதிக படங்களில் அவர் நடிக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும் அவர் கூறியுள்ளார்.

வருஷத்துக்கு ஒரு இந்தி படம்

வருஷத்துக்கு ஒரு இந்தி படம்

அட்ரங்கி ரே படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது இந்த படத்தில் நான் நடிக்க வேண்டுமென ஒரு வருஷத்துக்கு முன்னாடியே ஆனந்த் எல் ராய் அட்வான்ஸ் கொடுத்து காத்திருந்தார். முதல் படத்திற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்தே அவருடன் இணைய முடிந்தது. ஆண்டுக்கு ஒரு இந்தி படமாவது பண்ண வேண்டும் என முடிவு செய்துள்ளேன். அதற்கு ஏற்றவாறு என் ஷெட்யூலை அமைத்துக் கொள்வேன் என்றும் தனுஷ் கூறியிருந்தார்.

மனைவியை பிரியபோவதாக

மனைவியை பிரியபோவதாக

நடிகர் தனுஷ் சென்னையில் அதிக நேரம் இருக்க விரும்பவில்லை என்றும் கோலிவுட்டை தாண்டி சாதிக்க வேண்டும் என்பதால் மும்பையில் வீடு வாங்கிக் கொண்டு செல்லப் போவதாக கூறியது தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் தனுசுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற காரணமாக இருந்தது என்று சில தகவல்கள் கசிந்தன. இந்நிலையில், விரைவில் தனுஷ் முழு நேர பாலிவுட் நடிகராகவே மாறிவிடுவாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

அடுத்து ஹாலிவுட் தான்

அடுத்து ஹாலிவுட் தான்

பாலிவுட்டில் அடுத்தடுத்து 2 படங்களில் நடிகர் தனுஷ் புக் ஆகி உள்ளார் என்றும் மேலும், சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தனுஷை அணுகி வருவதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு புறமிருக்க அவெஞ்சர்ஸ் பட இயக்குநர் இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேமேன் படத்தில் தனுஷ் நடித்து வரும் நிலையில், பாலிவுட்டை தொடர்ந்து ஹாலிவுட்டிலும் நடிகர் தனுஷ் செட்டில் ஆவாரா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் கிளம்பி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X