twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹைகோர்ட் விதித்த 48 மணிநேர கெடு.. சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவாரா நடிகர் தனுஷ்?

    |

    சென்னை: நடிகர் தனுஷ் சொகுசு காருக்கான நுழைவு வரியை செலுத்துவாரா அல்லது மேல் முறையீடு செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். எந்த மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளி வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பாலிவுட் என கலக்கி வருகிறார் தனுஷ்.

    அசுரனுக்கு போட்டியாக 15 கிலோ எடை குறைத்து வெறித்தனமாக நடிக்கும் சிம்பு.. தரமான சம்பவம் வெயிட்டிங்! அசுரனுக்கு போட்டியாக 15 கிலோ எடை குறைத்து வெறித்தனமாக நடிக்கும் சிம்பு.. தரமான சம்பவம் வெயிட்டிங்!

    சிறந்த நடிப்புக்காக தேசிய விருது, பிலிம் ஃபேர் விருதுகள் என பல விருதுகளை குவித்துள்ளார் தனுஷ். இந்நிலையில் கடந்த சில நாட்களாய் உயர்நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகி அடிக்கடி செய்திகளில் அடிப்பட்டு வருகிறார்.

    நுழைவு வரி வசூலிக்க தடை கோரி

    நுழைவு வரி வசூலிக்க தடை கோரி

    அதாவது நடிகர் தனுஷ் கடந்த 2015ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    பாதி வரி செலுத்திய தனுஷ்

    பாதி வரி செலுத்திய தனுஷ்

    அந்த வழக்கை அப்போது விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து 30 லட்சத்து 33 ஆயிரத்தை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விதிகளை பின்பற்றி காரை பதிவு செய்ய 2016 ஆம் ஆண்டு ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார்.

    நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த வழக்கு

    நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த வழக்கு

    இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, மீதமுள்ள வரியை திங்கட்கிழமைக்குள் செலுத்த தயாராக இருப்பதாகவும், அதனால் வழக்கை முடித்துவைக்கும்படி கோரிக்கை வைத்தார்.

    தனுஷ் தொழிலை மறைத்தது ஏன்?

    தனுஷ் தொழிலை மறைத்தது ஏன்?

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வாங்கும் அளவில் உள்ள தனுஷ், நுழைவு வரி செலுத்துவதை எதிர்த்த வழக்கின் மனுவில், என்ன பணி அல்லது தொழிலில் இருக்கிறீர்கள் என குறிப்பிடாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

     அப்போதே வாபஸ் பெற்றிருக்கலாமே?

    அப்போதே வாபஸ் பெற்றிருக்கலாமே?

    என்ன வேலை என்பதை ஏன் மறைத்தார் என விளக்கமளித்து மனுத்தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதி, 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, வரியை செலுத்திவிட்டு வழக்கை வாபஸ் பெற்றிருக்கலாமே எனவும், அப்படி என்றால் உங்கள் நோக்கம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.

    வாபஸ் பெற அனுமதிக்க முடியாது

    வாபஸ் பெற அனுமதிக்க முடியாது

    உச்ச நீதிமன்றம் தீர்ப்பிற்கு பிறகும், இதுவரை வரி செலுத்தாத நிலையில் வாபஸ் பெற அனுமதிக்க முடியாது என்றும் அதிரடியாக கூறினார். மேலும் மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டிதானே என்றும உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து வழக்கறிஞர்தானே மனுதாரருக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும் என்றும் விளாசினார்.

    பால்காரர், சோப்பு வாங்குபவர்

    பால்காரர், சோப்பு வாங்குபவர்

    50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பால்காரர், சோப்பு வாங்கும் பொதுமக்கள் போன்ற ஏழை நடுத்தர மக்கள் கூட வரி செலுத்திதானே பயன்படுத்துகிறார்கள் என்ற நீதிபதி, பெட்ரோலில் ஜி.எஸ்.டி. கட்ட முடியவில்லை என அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

    எத்தனை கார் வேண்டுமானாலும் வாங்குங்கள்

    எத்தனை கார் வேண்டுமானாலும் வாங்குங்கள்

    உங்கள் தொழிலில் நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும் சம்பாதியுங்கள், எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் கார் வாங்குங்கள் என குறிப்பிட்ட நீதிபதி, ஆனால் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்துங்கள் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.

    விரி செலுத்துவாரா? மேல்முறையீடு செய்வாரா?

    விரி செலுத்துவாரா? மேல்முறையீடு செய்வாரா?

    மேலும் நுழைவு வரியில் ரூ. 30,30, 357 லட்ச ரூபாய் தனுஷ் செலுத்த வேண்டிய பாக்கி வரியை 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டுமென கெடு விதித்து உத்தரவிட்டார். நீதிமன்றம் விதித்த கெடு நிறைவடையவுள்ள நிலையில் நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வாரா அல்லது நுழைவு வரி பாக்கியான 30,30,757 ரூபாயை உரிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் செலுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    மேல் முறையீடு செய்த விஜய்

    மேல் முறையீடு செய்த விஜய்

    ஏற்கனவே நடிகர் விஜய் தனது சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்தததோடு அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். இதனால் கடுப்பான நடிகர் விஜய் அபராதம் செலுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல் முறையீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Dhanush will pay the remaining tax? or will appeal against the judgement. Chennai high court ordered Dhanush to pay remaining tax within 48 hours on Thursday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X