Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்னது.. இப்போதான் வர்றீங்களா.. அப்போ அது? தீயாய் பரவும் கவுண்டமணியின் டிவிட்டர் கணக்கு!
சென்னை: நடிகர் கவுண்டமணி டிவிட்டரில் இணைந்துள்ளதாக டிவிட் ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக வலம் வந்தவர் நடிகர் கவுண்டமணி. மேடை நாடகங்களில் நடித்து வந்த நடிகர் கவுண்டமணி சர்வர் சுந்தரம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
பிக்பாஸ் சீசன் 5 ப்ரோமோ எப்போ... பரபரப்பான ஹாட் அப்டேட்
1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக உச்சத்தில் இருந்தார். இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கவுண்டமணி.

செந்தில் கவுண்டமணி காமெடி காம்போ
சோலோவாக பல படங்களில் காமெடி செய்து கலக்கிய கவுண்டமணி பின்னர் நடிகர் செந்திலுடன் சேர்ந்து சினிமாவில் காமெடியில் பட்டையை கிளப்பியுள்ளார். இன்று வரையிலும் அவர்களின் காமெடி காம்போவை எந்த நடிகராலும் தொடக் கூட முடியவில்லை. அந்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் போட்ட அமர்ந்துள்ளார் கவுண்டமணி.

காமெடி, வில்லன், குணச்சித்திர நடிகர்
பல இளம் காமெடி நடிகர்கள் கவுண்டமணியை ரோல்மாடலாக பின்பற்றி வருகின்றனர். அவரது உடல்மொழி, டைம்மிங் சென்ஸ், வாய்ஸ் மாடுலேஷன் என அத்தனையும் வேற ரகம். நடிகர் கவுண்ட மணி நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லன் நடிகராகவும் வலம் வருகிறார்.

டிவிட்டரில் இணைந்திருப்பதாக பதிவு
நடிகர் கவுண்டமணி கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான வாய்மை படத்தில் நடித்தார். அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை கவுண்டமணி. இந்நிலையில் நடிகர் கவுண்டமணி டிவிட்டர் தளத்தில் இணைந்திருப்பதாக ஒரு டிவிட் வைரலாகி வருகிறது. ஏற்கனவே அவரது பெயரில் ஒரு டிவிட்டர் கணக்கு உலா வருகிறது.

வெள்ளை சட்டை கறுப்பு கண்ணாடி
இந்த புதிய கணக்கில், எனது ட்விட்டர் பயணத்தை இன்று தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! என தெரிவிக்கப்பட்டுள்ளது. GoundamaniOffl என்ற டிவிட்டர் ஹேண்டிலில் இருந்து இந்த பதிவு இடப்பட்டுள்ளது. மேலும் கவுண்டமணி வெள்ளை சட்டை கறுப்பு கண்ணாடியில் தலையில் தொப்பியுடன் இருக்கும் போட்டோவும் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் ஒரு லெஜண்ட்
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், நான் உங்கள் ரசிகன் என போட்டி போட்டுக் கொண்டு வரவேற்றுள்ளனர். பலரும் டிவிட்டரில் இணைந்ததற்கு நன்றி என்றும் கூறி வருகின்றனர். இந்த ரசிகர், மிகவும் மகிழ்ச்சி... நீங்கள் ஒரு லெஜண்ட்... இப்போதேனும் என்போன்ற ரசிகர்களுடன் தொடர்பில் இருங்கள் சார் என பதிவிட்டுள்ளார்.

இந்த வாய்ப்பு பெரியது
மற்றொரு ரசிகரான இவர், கவுண்டர்... உங்க கவுண்டுக்கு, இதனை நாள் ஆச்சு.. வாழ்த்துகள் வாங்க வாங்க நான் இருக்கேன், உங்க கிட்ட பேச இந்த வாய்ப்பு பெரியது என பதிவிட்டுள்ளார்.

உங்களிடம் கைக்குலுக்கியது போல்
இந்த ரசிகர், சார் உங்களை வரவேற்கிறேன், நீங்கள் டிவிட்டருக்கு வந்தது உங்களிடம் கைக்குலுக்கியது போன்ற மகிழ்ச்சியை தருகிறது என பதிவிட்டுள்ளார்.

அப்போ அது யாரு?
அதேநேரத்தில் பலரும் இது ஃபேக் ஐடி என கூறி வருகின்றனர். சிலர் ஏற்கனவே கவுண்டமணி பெயரில் இருப்பது யார் என கேட்டு வருகின்றனர். ஏற்கனவே itisGoundamani என்ற ஹேண்டிலில் இருந்து பல டிவிட்டுகள் ஷேர் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த ஐடி முடங்கியுள்ளது.

ஃபேக் ஐடி - நடிகர்கள் புகார்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் செந்தில், நடிகர் மயில்சாமி, நடிகர் சார்லி ஆகியோரது பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டன. இதனை தொடர்ந்து நடிகர் செந்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது பெயரில் டிவிட்டரில் உலா வரும் போலி கணக்கால் தனது நிம்மதியே போய்விட்டதாக புகார் அளித்தார்.

போலி கணக்கு - விளக்கம்
அவரை தொடர்ந்து நடிகர் சார்லி பெயரிலும் போலி கணக்கு தொடங்கப்பட்டது. அவரும் போலீஸில் புகார் அளித்தார். அதன்பின் அரை மணி நேரத்தில் அவரது போலி கணக்கு முடக்கப்பட்டது. பின்னர் நடிகர் மயில்சாமி, தனக்கு டிவிட்டரில் கணக்கு இல்லை, தனது பெயரில் உலா வரும் கணக்கு போலியானது என விளக்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.