Don't Miss!
- Finance
குழந்தை, வேலை எனது அற்புதமான இரட்டையர்கள்.... எடெல்வீஸ் MD ராதிகா குப்தா!
- News
ஆபரேசன் தாமரை! நேற்று பீகார்.. அடுத்து புதுச்சேரி - பகீர் கிளப்பும் எதிர்க்கட்சித் தலைவர்
- Lifestyle
ஆண்களைப் பற்றிய இந்த ரகசியங்களை பெண்கள் ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாதாம்... அது என்னென்ன தெரியுமா?
- Sports
"நீங்களே இப்படி செய்யலாமா".. இந்திய மகளிர் அணி குறித்து கங்குலி போட்ட ட்வீட்.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
பேச்சுலர் படம் புதிய பாதையை உருவாக்கும்… ஜிவி பிரகாஷ் குஷி
சென்னை : நடிகர் ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி நடிப்பில் உருவாகியுள்ள படம் பேச்சுலர்.
இந்தப் படம் வரும் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
அடேங்கப்பா... 1000 எபிசோட்களை தொட்ட ரோஜா சீரியல்
இதையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜிவி பிரகாஷ், இந்தப் படம் புதிய பாதையை வகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பேச்சுலர் படம்
நடிகர் ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேச்சுலர். அறிமுக இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் வரும் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மாறுபட்ட கதைக்களம்
நிகழ்ச்சியில் பேசிய ஜிவி பிரகாஷ், இந்தப் படத்தின் மூலம் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தப் படம் பெயருக்கேற்றாற்போல புதுமுக நட்சத்திரங்களை கொண்டு உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். மணிரத்னம், செல்வராகவன் போல புதுமுக இயக்குநர் சதீஷ் செல்வகுமார், இந்தப் படத்தின்மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி ஒரு புதிய பாதையை உருவாக்குவார் என்றும் கூறியுள்ளார்.
|
மாறுபட்ட நடிப்பு
தனது முந்தைய படங்களில் இருந்து மாறுபட்ட நடிப்பை வழங்கியுள்ளதாகவும் தன்னுடைய கேரியரில் வித்தியாசமான படமாக இது அமையும் என்றும் அவர் கூறினார். மேலும் தன்னுடன் நடித்த நடிகை திவ்யபாரதி ஆரம்பத்தில் பதற்றத்துடன் நடித்ததாகவும் அவருக்கு தன்னம்பிக்கை கொடுத்து இயல்பாக நடிக்க அறிவுறுத்தியதாகவும் அவர் மேலும் கூறினார்.

இளைஞர்களுக்கான படம்
இந்தப் படம் இளைஞர்களுக்கான விஷயங்களுடன் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இதை நிரூபிக்கும் வகையில் படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவையும் வெளியாகியுள்ளன. ஆனால் முன்னதாக இந்தப் படம் குடும்பத்தில் அனைவரும் இணைந்து பார்க்கும் படமாக அமைந்துள்ளதாக இயக்குநர் தெரிவித்திருந்தார். ஆயினும் சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலரை வைத்து பார்க்கும்போது இது இளைஞர்களுக்கான படமாகவே தெரிகிறது.

ஸ்மார்ட்டான ஜிவி பிரகாஷ்
ஆனால் இந்தப் படத்தில் முந்தைய படங்களை போல இல்லாமல் மிகவும் ஸ்மார்ட்டான ஜிவி பிரகாஷை பார்க்க முடிகிறது. படத்தில் கிராமத்தில் இருந்து பெங்களூரு ஐடி நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் இளைஞனின் கதாபாத்திரத்தில் ஜிவி நடித்துள்ளார். அவரது வாழ்க்கையில் குறுக்கிடும் ஒரு பெண் அதன்மூலம் அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது.

ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பு
படத்தில் முனீஷ்காந்த், பகவதி பெருமாள் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதலை மையமாக வைத்து இந்தப் படம் வெளியாகவுள்ளது. ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி சார்பில் இந்தப் படத்தை டில்லிபாபு தயாரித்துள்ளார். படத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளதாக இயக்குநர் கூறியுள்ளார்.

புதுமுகங்களுக்கு வாய்ப்பு
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் புதுமுகங்களுக்கு சிறப்பான வாய்ப்புகளை அளித்து வருவதாகவும் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரிக்கு பிறகு டில்லிபாபு இத்தகைய முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் ஜிவி பிரகாஷ் இந்த செய்தியாளர் சந்திப்பில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.