»   »  அத்தையின் சொத்து, கட்சி, பதவி வேணும்... தண்டனை மட்டும் வேணாமா தீபா, தீபக்? - நடிகர் ஜீவா

அத்தையின் சொத்து, கட்சி, பதவி வேணும்... தண்டனை மட்டும் வேணாமா தீபா, தீபக்? - நடிகர் ஜீவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

தீபா அவர்களே... சுயநலத்துக்காக கட்சி ஆரம்பித்து தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார் நடிகர் ஜீவா.

வளர்ந்து வரும் நாயகர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் ஜீவா. பெருந்தலைவர் காமராஜரின் தொண்டராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஜீவா, ரஜினியின் தீவிர ரசிகர்.

Actor Jeeva slams J Deepa

ஜீவா இப்போது ஆரம்பவே அட்டகாசம், மாப்பிள்ளை விநாயகர், மெரிலின், பயமா இருக்கு போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

சினிமாவோடு ஒதுங்கிவிடாமல், தொடர்ந்து அரசியல், சமூக நிகழ்வுகள் குறித்த தன் கருத்துகளை துணிந்து வெளிப்படுத்தி வருகிறார்.

சமீப காலமாக நடக்கும் அரசியல் நிகழ்வுகள், குறிப்பாக ஜெ தீபா, தீபக் போன்றவர்கள் செய்துவரும் 'அரசியல் காமெடிகள்' மீதான விமர்சனங்களையும் அவர் வைத்துள்ளார்.

Actor Jeeva slams J Deepa

"ஜெ தீபா, உங்களுக்கு அத்தையின் (ஜெயலலிதா) சொத்துக்கள் வேண்டும், அத்தையின் கட்சி வேண்டும், அத்தையின் பதவிவேண்டும்..
அத்தைக்கு கிடைத்த தண்டனை மட்டும் உங்களுக்கு வேண்டாமா. அத்தையின் வாரிசுதானே..?

உங்கள் அத்தையை ஊழல் செய்த குற்றவாளியென உச்ச நீதிமன்றம் உறுதிசெய்த அதே நாளில், அதை ஒரு பெருமையாக நினைத்துக் கொண்டு உங்களால் எப்படி அரசியல் பிர(வேஷம் ) செய்ய முடிகிறது.

உங்களுக்கு அரசியல் ஆசை இருந்தால் அந்த நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை அவருக்கு பதிலாக நீங்கள் அனுபவித்து உங்கள் தலைவி மீதுள்ள களங்கத்தை போக்கிவிட்டு அரசியலுக்கு வாருங்கள்... மக்களை ஏமாற்றாதீர்கள்.

தீபாவுக்கு, என் தாழ்மையான வேண்டுகோள்... தமிழக மக்கள் ஐம்பது ஆண்டுகளாக ஏமாந்தது போதும். உங்கள் சுயநலத்திற்காக கட்சி ஆரம்பித்து தமிழக மக்களை நீங்களும் ஏமாற்றாதீர்கள் ! தமிழகத்தின் தற்போதய தேவை சுயநல, அனுதாப ஆட்சி இல்லை. அறவழியிலான ஆக்கபூர்வ ஆட்சி," என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா மரணமடையும் வரை யாரென்றே தெரியாமல் இருந்துவிட்டு, திடீரென போயஸ் தோட்டத்துக்கு சொந்தம் கொண்டாடும் தீபக்குக்கும் இதே கேள்விகளை வைத்துள்ளார் ஜீவா.

English summary
Comedian turned hero Jeeva has strongly crticised J Deepa and Deepak for claiming rights to late CM Jayalalithaa's assets and political party.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil