Don't Miss!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
என்னலாம் சிந்தித்த உள்ளங்களுக்கு நன்றி... கமல் மகிழ்ச்சி
சென்னை : உலகநாயகன் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தார்.
Recommended Video
தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியில் வந்துள்ளார்.
என்ன இப்படி கிளம்பிட்டாங்க வாணி போஜன்... தெய்வமகளின் அட்டகாசமான புகைப்படங்கள்
இந்நிலையில் தன்னுடைய நலனுக்காக சிந்தித்த உள்ளங்களுக்காக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய போது அவருக்கு கொரோனா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் தேறியுள்ளார்.

தேறினார் கமல்ஹாசன்
அவர் தன்னுடைய வழக்கமான பணிகளில் ஈடுபடலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆயினும் அவர் தற்போது ஓய்வில் உள்ளார். சில தினங்களுக்கு பின்பு தன்னுடைய வழக்கமான பணிகளை அவர் மேற்கொள்வார் என தெரிகிறது. அவர் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டுள்ளார்.

ரசிகர்கள் பிரார்த்தனை
அவர் விரைவில் குணமடைய பல்வேறு தரப்பினரும் பிரார்த்தனை மேற்கொண்டனர். சமூக வலைத்தளங்கள் மூலம் அவர் குணமடைய கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் தான் குணம் அடைந்ததை அடுத்து கமல்ஹாசன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் நன்றி
முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும் என்றும் அவற்றையும் மீறி சுகம் கேட்டால் நாம் எடுக்கும் நடவடிக்கைகள் நம்மை காப்பாற்ற கூடுமென்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் தொற்றுத் தாக்கியும் விரைவில் மீண்டு இருக்கிறேன் என்றும் தன்னுடைய நலனை சிந்தித்த உள்ளங்கள் குறித்து மகிழ்ந்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

நலமாக இருப்பதாக அறிக்கை
மருத்துவமனை வாசம் முடிந்து இன்று பணிக்கு திரும்பியுள்ளதாகவும் நலமாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். தனக்கு சிறப்பாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் நன்றி
தன்னுடைய நலனை விரும்பிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கும் ரஜினிகாந்த், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்டவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி
தன்னுடைய விடுப்பை சமாளித்த விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிக்பாஸ் குழுவினருக்கும் விஜய் டிவிக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். தன்னுடைய நலனை கருத்தில் கொண்டு பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு அவர் மேலும் நன்றி தெரிவித்துள்ளார்.