»   »  உறவுக்காரன் இறந்த நாளைக் கொண்டாடாத கமல் தீபாவளிக்கு புதுத் துணி வாங்கச் சொல்றாரே.. நியாயமா?

உறவுக்காரன் இறந்த நாளைக் கொண்டாடாத கமல் தீபாவளிக்கு புதுத் துணி வாங்கச் சொல்றாரே.. நியாயமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை. என் உறவுக்காரனை, நரகாசுரனை கொன்றதற்காக அந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அவனும் மனிதன்தான்' என தன் பிறந்தநாள் விழாவில் பேசியுள்ளார் கமல்.

ஆனால், டிவியை ஆன் செய்தாலே தீபாவளி டிரஸ்-னா அது ஸ்பெஷன் தான் என துணிக்கடை ஒன்றின் விளம்பரத்தில் தோன்றி முரணாக சிரிக்கிறார்.

Actor Kamal's controversial attitude on diwali celebration

விளம்பரங்களில் தோன்றவே மாட்டேன் என உறுதிபட இருந்த கமல், நல்ல காரியம் ஒன்றிற்காகத் தான் முதன்முறையாக விளம்பரத்தில் நடித்துள்ளார். இதற்காக நிச்சயம் கமல் பாராட்டப்பட வேண்டியவர் தான்.

இந்நிலையில், நேற்று தனது 61வது பிறந்தநாளைக் கொண்டாடினார் கமல். சென்னையில் நடைபெற்ற பிறந்தநாள் நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய கமல், ‘ தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை. என் உறவுக்காரனை, அசுரனை கொன்றதற்காக அந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அவனும் மனிதன்தான்' என உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

ஆனால், அந்த தனது முதல் விளம்பரத்திலேயே தீபாவளிக் கொண்டாட்டம் குறித்து தான் நடித்திருக்கிறார்.

பத்திரிக்கையாளர்கள் எப்படி தன் சொந்தக் கருத்தை செய்தியில் சேர்க்கக்கூடாதோ, அது போல் நடிகர்களுக்கும் நடிப்பு வேறு, சொந்தக் கருத்துகள் வேறு தான். அது மறுப்பதற்கில்லை. ஆனபோதும், தீபாவளியேக் கொண்டாட மாட்டேன் எனக் கூறும் கமல், தீபாவளின்னா நல்ல டிரஸ் எடுத்துக் கொண்டாடனும் எனக் கூறுவதை விளம்பரத்தில் பார்க்கும் போது சற்று நெருடலாகத் தான் இருக்கிறது.

English summary
Actor Kamal Hasan says that he will not celebrate diwali, but on the otherside he asks people to buy dresses for diwali in television ads.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil