twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கார்த்தி இந்த ரோல்ல நடிச்சா கண்டிப்பா சக்சஸ் தான்..அட ஆமால்ல..ரசிகர்களும் அதைத்தான் சொல்றாங்க

    |

    சென்னை: பருத்திவீரன், கொம்பன், கடைக்குட்டி சிங்கம் போன்ற கிராமிய கதாபாத்திரங்களில் கலக்கும் நடிகர் கார்த்தி அமெரிக்காவில் படித்தவர்.

    ஆனால் கார்த்தி அறிமுகமான முதல் படம் அமீர் இயக்கத்தில் வெளிவந்த பருத்திவீரன் படம் அதில் அவருக்கு கிராமத்து சண்டியர் பாத்திரம்.

    கார்த்தி அந்த படத்தில் புதுமுகமாக அறிமுகம் என்பதே இல்லாமல் 30 படங்களில் நடித்தவர்போல் அனாயசியமாக நடித்திருப்பார். சித்தப்பா சரவணனுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் தனி ரகம்.

    ஷங்கரின் ஜீன்னா சும்மாவா.. விருமன் படத்தில் இறங்கி குத்திய அதிதி ஷங்கர்.. ரசிகர்கள் குஷி! ஷங்கரின் ஜீன்னா சும்மாவா.. விருமன் படத்தில் இறங்கி குத்திய அதிதி ஷங்கர்.. ரசிகர்கள் குஷி!

    பருத்தி வீரன் முதல் படத்திலேயே முத்திரை

    பருத்தி வீரன் முதல் படத்திலேயே முத்திரை

    மனிதாபிமானம் இல்லாமல் மற்றவரிடம் நடந்து கொள்வது ரவுடித்தனம் செய்வது, காதலியிடம் அலட்சியம் காட்டுவது. பின்னர் உருகுவது. தாய் மாமனிடம் சென்று பெண் கேட்டு ரகளை செய்வது, தனது லட்சியமான தொலைக்காட்சியில் வரவேண்டும் என்பதற்காக சட்டத்துக்கு புறம்பான செய்லகளில் ஈடுபடுவது, கடைசியில் காதலி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழக்கும் காட்சியில் உருகுவது, கிராமத்து சண்டியர் உடல் மொழியில் சிறப்பாக வெளிப்படுத்தியது கார்த்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வைத்தது.

    நகர இளைஞராக நடித்த கார்த்தி

    நகர இளைஞராக நடித்த கார்த்தி

    பருத்தி வீரனுக்கு பின்னர் நடிகர் கார்த்தி பல படங்கள் ஏ செண்டரை மையப்படுத்தி நகரத்து இளைஞராக நடித்திருப்பார். இடையிடையே தனது நடிப்பை பரிசோதிக்கும் வகையில் ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கமர்சியல் படங்களாக அவர் நடித்த நான் மகான் அல்ல, பையா, தோழா, சிறுத்தை கோ, சகுனி போன்ற படங்களும். போலீஸ் அதிகாரியாக தீரன் அதிகாரம் ஒன்றிலும், பா.ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்திலும், லோகேஷின் கைதி படத்திலும் சிறப்பாக நடித்திருப்பார்.

    கிராமத்து நாயகனே கார்த்தியின் பலம்

    கிராமத்து நாயகனே கார்த்தியின் பலம்

    ஆனால் அவைகளில் குறிப்பிடத்தக்க சில படங்களில் மட்டுமே அவருக்கு பெயர் வாங்கித் தந்தது தீரன் அதிகாரம் ஒன்று, மெட்ராஸ், நான் மகான் அல்ல, கைதி உள்ளிட்ட படங்கள் கார்த்திக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள் என்றாலும் கிராமிய கதாநாயகன் சப்ஜக்ட் தான் கார்த்திக்கு சிறப்பாக பொருந்தியது எனலாம். கிராமத்து கதாநாயகனாக நடித்த அத்தனை படங்களுக்கும் கிடைத்த வரவேற்பு இதற்கு உதாரணம். கிராமத்து கதாநாயகனாக மிக அழகாக அந்த பாத்திரத்தில் பொருந்துவது கார்த்திக்கின் பலம் என்றே சொல்லலாம்.

    நியாயம் கேட்கும் கொம்பன் பாத்திரம்

    நியாயம் கேட்கும் கொம்பன் பாத்திரம்

    பருத்திவீரன் படத்தில் அவர் நடித்த சண்டியர் பாத்திரம், கொம்பன் படத்தில் நியாயத்தை தட்டிக்கேட்கும் ஒருவித ஆக்ரோஷம் உள்ள இளைஞராக நடித்திருப்பார். தனது மாமனார் ராஜ்கிரணிடம் ஈகோ காட்டுவதும், மற்றவர்களை எடுத்தெறிந்து பேசுவது போல நடித்த அவரது பாத்திரம் சிறப்பாக அமைந்தது. தனது கோபத்தால் பலர் மனதை புண் படுத்தியிருப்பதை உணர்ந்து மாறும் காட்சியை அழகாக செய்திருப்பார் கார்த்தி. இந்தப்படத்திலும் கார்த்திக் அவர்களுடைய உடல் மொழி வசன உச்சரிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். இந்தப்படத்தின் இயக்குநர்தான் விருமன் படத்தையும் இயக்கியுள்ளார்.

    பேர் வாங்கித்தந்த ’கடைக்குட்டி சிங்கம்’

    பேர் வாங்கித்தந்த ’கடைக்குட்டி சிங்கம்’

    இதன் பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான படம் கடைக்குட்டி சிங்கம் அக்காள்கள் நடுவில் ஒரே ஒரு ஆண் பிள்ளையாய் அனைவருக்கும் செல்லமான தம்பி பாத்திரம். தம்பி அல்ல வயதால் அனைவரும் அவருக்கு தாயாக இருப்பர். அக்காள் கணவர்கள் பலவிதமாக இருப்பர். சித்தப்பாவாக சூரியும், சித்தியாக பானுப்பிரியாவும் தந்தையாக சத்யராஜ் என பெரிய குடும்பமாக படம் முழுவதும் கார்த்தி, சூரி அடிக்கும் லீட்டி கலகலப்பாக இருக்கும். சொந்த பந்தம் என சுற்றத்தார் மத்தியில் இருக்கும் ஒரு அன்பான இளைஞன் அப்பாவை பெரிதும் மதிப்பவர், விவசாயத்தை நேசிப்பவர், ஊரில் பெரிய அளவில் மரியாதை பெற்றவர் என கார்த்தியின் பாத்திரம் இருக்கும்.

    பாண்டிராஜ் என்றாலே குடும்ப உறவுகள் தானே

    பாண்டிராஜ் என்றாலே குடும்ப உறவுகள் தானே

    படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் குடும்பக்கதைகளுக்கும் கிராமம் சார்ந்த படங்களுக்கும் பெயர் பெற்றவர். குடும்ப உறவுகளின் ஆழத்தை படத்தில் மையப்படுத்தி காட்டுவதில் வல்லவர். சகோதரிகள் மகளை கார்த்திக்கு கட்டி வைக்க நடக்கும் சண்டை இருந்தாலும் அனைவரின் வீடுகளிலும் சென்று பழகி அவர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பவர். சகோதரிகளுக்காக அவர்களது பிள்ளைகளுக்கும் தன்னுடைய வருமானத்தை செலவழிப்பவர் என அழுத்தமான பாத்திரம் நடிகர் கார்த்திக்கு இந்த பாத்திரத்தில் மிக அழகாக நடித்திருப்பார். கார்த்தி இயற்கையாகவே விவசாயத்தின் மீது நாட்டம் கொண்டவர் என்பதால் அவருக்கு இப்படம் உணர்வு பூர்வமாக நடிப்பதற்கு வாய்ப்பாக அமைந்தது .

    விவசாயம் பற்றி பேசும் காட்சி, நெஞ்சைத்தொடும் கிளைமாக்ஸ்

    விவசாயம் பற்றி பேசும் காட்சி, நெஞ்சைத்தொடும் கிளைமாக்ஸ்

    கல்லூரி விழாவில் விவசாயத்தைப் பற்றி பேசும் காட்சியில் மிக சிறப்பாக நடித்து இருப்பார். ஒரு நாள் விவசாயியாக வாழ்ந்து பாருங்கள் அது கூட வேண்டாம் விவசாயி உடன் வாழ்ந்து பாருங்கள் என்கிற வசனம் மிக சிறப்பாக இருக்கும். இந்த படத்தில் சகோதரிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் கடைசியில் எடுக்கும் முயற்சிகள் கடைசி காட்சியில் அழுதபடி வசனம் பேசுவது அவர் பேசும் வசனம்த்தால் தவறை உணர்ந்த சகோதரிகள் அழுதபடி இணைவது போன்ற காட்சிகள் மிக அழகாக இருக்கும். கார்த்திக் இந்த படத்தில் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தார்.

    பி, சி சென்டர்களில் முத்திரை

    பி, சி சென்டர்களில் முத்திரை

    இதுபோன்ற கிராமத்து பாத்திரங்கள் அனைத்திலுமே கார்த்தி பி,சி செண்டர்களில், நடுத்தர குடும்ப பெண்களிடம் எளிதாக சென்று சேர்ந்தார். அதே போன்றதொரு பாத்திரமாகத்தான் விருமன் படமும் வந்துள்ளது. கார்த்தியின் வழக்கமான அசால்ட் , அலட்சிய நடிப்பும் அதற்கு இணையாக ஒரு தந்தையாக பிரகாஷ்ராஜ் நடித்திருப்பதும் வழக்கமாக கார்த்தி படத்தில் நடிக்கும் சூரி கதாநாயகனுக்கு இணையாக காமெடியில் இணைந்துள்ளதும் தந்தை மகன் இடையே இருக்கும் போட்டி அதற்கான சுவாரசிய காட்சிகள் என படம் எடுக்கப்பட்டுள்ளது.

    விருமனும் வெற்றி பெறுமா?

    விருமனும் வெற்றி பெறுமா?

    விருமனை அன்பாக அடக்கலாம், அடக்கி காரியம் சாதிக்க முடியாது போன்ற வசனங்களும் இந்த படமும் அவருக்காக சிறப்பாக வந்திருக்கிறது என்று சொல்லலாம். பொதுவாக கிராமத்து கதைகளை மற்றவர்கள் மறந்துவிட்ட நிலையில் கார்த்தி இது போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து முத்திரை பதித்து வருகிறார். விருமன் படமும் அதில் ஒன்று. இந்தப் படம் அவருக்கு வெற்றி படமாக அமையும் என்றே சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்கள் தெரிவிக்கிறது.

    English summary
    Actor Karthi, who plays village characters like Paruthiveeran, Komban, and Kadaikutty Singham, was educated in America.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X