குதிரைகளுக்கும் எனக்குமான காதல்... காஷ்மோரா முதல் பொன்னியின் செல்வன் வரை... பகிர்ந்த கார்த்தி!
சென்னை : நடிகர் கார்த்தி அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, சர்தார் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படமும் விரைவில் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். படத்திற்கு படம் வித்தியாசமான கார்த்தியை பார்க்க முடிகிறது. திடீரென கல்லூரி மாணவனாக நடிக்கும் அவர், அடுத்த படத்திலேயே வீரமான போலீஸ் அதிகாரியாக தோன்றுகிறார். திடீரென 5 சகோதரிகளுக்கு பாசமான தம்பியாக நடித்து பட்டையை கிளப்புகிறார்.

சிறப்பான கதைத்தேர்வு
தன்னுடைய கதைகளை சிறப்பாக தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் தனக்கென சிறப்பான ரசிகர்களை கொண்டுள்ளார் கார்த்தி. இவரது பையா, கொம்பன், சுல்தான் படங்கள் இவருக்கு மிகுந்த ஏற்றத்தை கொடுத்தவை. இந்த மூன்று படங்களும் ஏப்ரல் 2ம் தேதி ரிலீசானவை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இதுகுறித்து அவர் பகிர்ந்திருந்தார்.

பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி
தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவன் என்ற சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாக உள்ள இந்தப் படத்திற்காக எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் இந்தக் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குதிரையுடன் கார்த்தி
இந்நிலையில் இன்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் குதிரையுடன் தான் இருக்கும் ஒரு புகைப்படத்தை போட்டுள்ள கார்த்தி குதிரையுடன் தனக்கு இருக்கும் காதல் மிகவும் அலாதியானது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் காஷ்மோரா படத்தில் தான் குதிரையேற்றத்தை கற்றதாகவும் தற்போது அது பொன்னியின் செல்வன் படத்தில் காதலுடன் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாது
இந்த சந்தோஷத்தை தன்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள கார்த்தி, குதிரை தன்னுடன் சேர்ந்து பயணித்ததையும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷாகவும் ப்ரெஷ்ஷாகவும் காணப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











