கதிரின் புதிய அவதாரம்.. மிரண்டு போன ரசிகர்கள்.. வைரலாகும் பிக்ஸ்!

சென்னை : மதயானை கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கதிர், பிகில் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்து அசத்தியிருப்பார்.

இவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் விருதுகள் மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதையும் வென்று வரும் நிலையில் ஒவ்வொரு திரைப்படங்களிலும் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் புதிய அவதாரத்தில் இதுவரை பார்த்திராத முரட்டுத்தனமான புதிய கெட்டப்பில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை கதிர் வெளியிட்டதை அடுத்து இப்பொழுது அப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

விருதுகளையும் பாராட்டுகளையும்

விருதுகளையும் பாராட்டுகளையும்

நடிகர் கதிரை தமிழ் சினிமாவில் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது, இவர் அதிகமாகப் பேசுவதில்லை என்றாலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பல விருதுகளையும் பாராட்டுகளையும் தொடர்ந்து பெற்று வருகிறது.

இரண்டாவது கதாநாயகன்

இரண்டாவது கதாநாயகன்

மதயானைக்கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட கதிர், நடித்த முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிகர் என பாராட்டப்பட்டு விருதுகளையும் வென்ற நிலையில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியான பிகில் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து இரண்டாவது கதாநாயகனாக களமிறங்கி பட்டையைக் கிளப்பி இருந்தார்.

தரமான திரைப்படங்கள்

தரமான திரைப்படங்கள்

தரமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து விருதுகள் மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதையும் வென்று வரும் கதிர் ஜடா திரைப்படத்தை தொடர்ந்து இப்பொழுது சர்பத் என்ற கலக்கலான காமெடி திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

நீண்ட தாடியுடன் கல்குவாரியில்

நீண்ட தாடியுடன் கல்குவாரியில்

இந்த நிலையில் ஆங்கிலத் திரைப்படத்தில் வரும் ஹீரோக்கள் போல நீளமான பிளேசர் அணிந்து கொண்டு இதுவரை பார்த்திராத நீண்ட தாடியுடன் கல்குவாரியில் பலரும் வியந்து போகும் அளவில் அட்டகாசமான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இப்பொழுது வெளியிட்டதை அடுத்து சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகிறது. எனினும் இந்த புதிய கெட்டப் அடுத்த படத்திற்கான லுக்கா இருக்குமோ எனவும் ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X