எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. பிரேமம் பட ஹீரோவா இவரு..அதிர்ச்சியில் ரசிகர்கள்

கொச்சி :தமிழில் நேரம் படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி.

இவரது பிரேமம் படம் மூலம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார்.

தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் இவர் தற்போது மகாவீர்யர் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் நிவின் பாலி

நடிகர் நிவின் பாலி

நடிகர் நிவின் பாலி மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் சூப்பரான என்ட்ரியை கொடுத்தவர். அந்தப் படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவியை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் இவர் நடித்திருந்தார். படத்தில் வரும் மலரே நின்னை காணாதிருந்தால் பாடல் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் லிஸ்ட்டில் இடம்பெற்ற பாடல்.

கேரியர் பெஸ்ட் படம்

கேரியர் பெஸ்ட் படம்

இந்தப் படம் நிவின் பாலியின் கேரியரில் தி பெஸ்ட் படமாக அமைந்தது. முன்னதாக தமிழில் நேரம் படத்தில் இவர் நாயகனாக நடித்திருந்தார். பல பிரச்சினைகளில் மாட்டித் தவிக்கும் இளைஞன் ஒருவனுக்கு திடீரென அதிர்ஷ்டம் அடித்தால் என்னவாகும் என்பதை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது.

நேரம் படம்

நேரம் படம்

பிளாக் காமெடி த்ரில்லர் படமான இந்தப் படத்தில் நிவினுக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்திருந்தார். இந்தப் படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களை கவர்ந்த நிவின் பாலி, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்காமல் மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்தார்.

ராம் இயக்கத்தில் இணைந்த நிவின்

ராம் இயக்கத்தில் இணைந்த நிவின்

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் நிவின். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் அஞ்சலி. இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை ரசிகர்களை எதிர்பார்த்துள்ளனர்.

மகாவீர்யர் படம்

மகாவீர்யர் படம்

இந்நிலையில் தற்போது மலையாளத்தில் மகாவீர்யர் படத்தில் நடித்து முடித்துள்ளார் நிவின் பாலி. இந்தப் படம் வரும் 21ம் தேதி ரிலீசாக உள்ளதாக முன்னதாக நிவின் பாலி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்தப் படம் பிரபல எழுத்தாளர் எம் முகுந்தன் எழுதிய கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

ட்ரெயிலர் வெளியீடு

பேன்டசி படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை அப்ரிட் ஷைன் இயக்கியுள்ளார். அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள நிவின் பாலியின் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் ட்ரெயிலரும் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இந்த ட்ரெயிலருக்கு மிகுந்த வரவேற்பை கொடுத்துள்ளனர்.

ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நிவின்

ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நிவின்

இந்த ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிவின் பாலியை பார்த்த ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். காரணம் அதிக உடல் எடையுடன் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு நிவின் மாறியுள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். இவரை வைத்து மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக காணப்படுகின்றன.

வெற்றிக்கான கட்டாயம்

வெற்றிக்கான கட்டாயம்

நிவின் பாலியின் மைக்கேல், லவ் ஆக்ஷன் டிராமா, மூத்தோன், கனகம் காமினி கலகம் என அடுத்தடுத்த படங்கள் தோல்விப் படங்களாக அமைந்த நிலையில் தற்போது மகாவீர்யர் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது. இந்நிலையில் இப்படி குண்டடித்து தனது ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளார் நிவின்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X