»   »  இந்தத் தேர்தலில் நோட்டா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்- பார்த்திபன்

இந்தத் தேர்தலில் நோட்டா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்- பார்த்திபன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'இந்தத் தேர்தலில் நோட்டா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்' என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.

தமிழக சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.

Actor Parthiban Casting his Vote

நடிகர்களில் ரஜினி, அஜீத், கமல், விவேக், பார்த்திபன், கவுதம் கார்த்திக், சிவகார்த்திகேயன் நடிகைகளில் கவுதமி, குஷ்பூ, அக்ஷரா, ஷாலினி ஆகியோர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.

வாக்களித்த பின் நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் ''வேட்பாளர் குறித்து நன்றாக தெரிந்து கொண்டு ஓட்டுப் போட வேண்டும். வேட்பாளர் பற்றிய திருப்தி இல்லையென்றால் நோட்டாவுக்கு ஓட்டுப் போடுங்கள்.

இளைஞர்களில் ஏராளமானோர் நோட்டாவுக்கு தங்கள் வாக்குகளைப் போட தயாராக உள்ளனர். நோட்டாவுக்கு அடுத்த தேர்தலில் பவர் கிடைக்கும்.

இந்தத் தேர்தலிலும் நோட்டா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்'' என்று கூறியிருக்கிறார். முன்னதாக ''நோட்டாவை பற்றி நான் தொடர்ந்து பேசுவதால் ஏதோ நான் அதற்கு தான் வாக்களிக்கப் போகிறேனோ என்ற பிம்பம் வேண்டியதில்லை .

அது நான் தேர்ந்தெடுக்கப் போகும் தொகுதியின் வேட்பாளரை பொறுத்ததாகும் . அது அந்த மின்னணு இயந்திரத்தின் இதயத்தோடு நான் பதியப் போகும் ரகசியம்.

நாளை புதிதாய் வாக்களிக்கப் போகிறவர்களின் சந்தேகத்தை களைந்து "உங்கள் விருப்பமின்மையை நோட்டாவாகக் கூட பதியலாம் " என்று அவர்களை வாக்கு சாவடிக்கு அழைத்து செல்வதே என் நோக்கம்.

எல்லா கட்சியிலும் எனக்கு நண்பர்கள் வேட்பாளர்களாக இருக்கிறார்கள். அவர்களை தொலைபேசியில் அழைத்து என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டுமிருக்கிறேன்.

நாளை வேட்பாளர்கள் ரூபத்தில் வாக்காளர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் !விடியட்டும்'' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Parthiban Casting his Vote on Monday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil