பிரபாஸுக்கு பெண் பார்த்தாச்சு.. குட் நியூஸ் சொன்ன மாமா.. அந்த நடிகையா இருக்குமோ !

சென்னை : நடிகர் பிரபாஸுக்கு பெண் பார்த்துவிட்டதாக பிரபாஸின் மாமா கிருஷ்ணம் ராஜு தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வெளியாகி உள்ள தகவலால் பிரபாஸின் ரசிகர்கள் குஷியாகி, அந்த பெண் யார் என கேட்டு வருகின்றனர்.

பாகுபலி படத்திற்குப் பிறகு, தென்னிந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் புகழ் பெற்ற நடிகராக மாறியுள்ளார் பிரபாஸ்.

பிரபாஸ்

பிரபாஸ்

பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் பிரபாஸ். நடிகர் பிரபாஸிற்கு தற்போது 42வயதாகிறது. பாகுபலி படப்பிடிப்பின் போது 6 ஆயிரம் பெண்கள் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து இருந்தனர். ஆனால், அனைத்து பெண்களின் கோரிக்கையும் பிரபாஸ் நிராகரித்தார்.

இருவருக்கும் பக்கா கேமிஸ்டிரி

இருவருக்கும் பக்கா கேமிஸ்டிரி

பாகுபலி படத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி கேமிஸ்டிரி பக்காவாக ஒர்க் அவுட்டாகி இருந்தது. அந்த நேரத்தில் இவர்கள் இருவரின் பெயரும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. அதேபோல, சாஹோ படத்திலும் அனுஷ்காவின் பெயரை பிரபாஸ் சிபாரிசு செய்திருந்தார். அனுஷ்கா, அப்போது குண்டாக இருந்ததால் அந்த கதாபாத்திரம் ஷ்ரத்தா கபூருக்கு சென்றது.

என் கணிப்பு தவறாக உள்ளது

என் கணிப்பு தவறாக உள்ளது

சமீபத்தில் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது இதற்கு சிரித்துக்கொண்ட பதிலளித்த பிரபாஸ், காதல் பற்றிய என் கணிப்புகள் எப்போதும் தவறாகவே இருக்கும். அதனால்தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறியிருந்தார்.

பெண் பார்த்தாச்ச

இந்நிலையில், பிரபாஸின் மாமா கிருஷ்ணம் ராஜு அண்மையில் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், பிரபாஸுக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், இந்த வருடம் திருமணம் நிச்சயமாக நடக்கும் என்றும், திருமணம் தேதி குறித்த தெளிவான அறிவிப்பை விரைவில் குடும்பத்தினர் வெளியிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாரா இருக்கும்

யாரா இருக்கும்

பிரபாஸ் திருமணம் குறித்து இவர் பேசியது, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தனை பார்த்த ரசிகர்கள் பலரும், அனுஷ்காவுக்கும் தற்போது பட வாய்ப்பு எதுவும் இல்லை, அவருக்கும் மாப்பிள்ளை பார்ப்பதாக தகவல்கள் பரவிவரும் நிலையில், ஒரு வேளை இந்த நடிகைதான் பொண்ணா இருக்குமோ என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். நடிகர் பிரபாஸ் தற்போது, சலார், ஆதிபுருஷ் போன்ற படங்களில் நடித்து வருகிறார் .

Recommended Video

Sivakarthikeyan-னுக்காக பாடல் பாடிய உலகப்புகழ் பாடகர் Abdu Rozik |*Kollywood | Filmibeat Tamil
விறுவிறுப்பான படப்பிடிப்பு

விறுவிறுப்பான படப்பிடிப்பு

கே.ஜி.எஃப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கிதன் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 30 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதால் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X